இயக்குநர் சிவாவுடன் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் அஜித் வேதாளம் என்கிற அட்டகாசமான அதிரடி ஆக்ஷன் படத்தை உருவாக்கியுள்ளார்கள். அடுத்த வாரம் வெளியாகவிருக்கும் இப்படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகிறது.
அஜித், ஸ்ருதிஹாசன், லட்சுமி மேனன் என இளைஞர்களுக்கு பிடித்த அபிமான நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படத்தின் இரண்டு வீடியோ பாடல்கள் முன்னோட்டமாக சமீபத்தில் வெளியிட்டார்கள். அஜித்தின் பட அறிவிப்புகளோ அல்லது படம் சம்பந்தப்பட்ட ஏதாவது விஷயமாக இருந்தாலும் அது ரசிகர்களுக்கு சிவராத்திரியாகவே இருக்கிறது.
இன்றும் ரசிகர்களுக்கு சிவராத்திரிதான் அஜித்தின் வேதாளம் படத்தின் அட்டகாசமான டிரெய்லர் இன்று வெளியாகிறதாம்.
Tags:
அஜித்
,
அஜித்தின் வேதாளம்
,
ஒரு வாரத்திற்கு முன்பே வெளியாகிறது
,
சினிமா