இந்தி சினிமாவில் சூப்பர் ஸ்டார் யார்? இப்போ ஷாருக்கான், சல்மான்கான்… அப்போ முன்னாடி அமிதாப்பச்சன். சரி இங்க வாங்க… ஆந்திராவில் யார் சூப்பர் ஸ்டார்? முன்னாடி சிரஞ்ஜீவி காரு.. இப்போ மகேஷ் பாபு காரு.
கொஞ்சம் கேரளா பக்கம் போனால்…. அங்க முன்னாடி மம்மூட்டி, மோகன்லால். இப்போ திலீப். சரி கர்நாடகா பக்கம் போனால்.. அங்க முன்னாடி ராஜ்குமார். இப்போ புனித் ராஜ்குமார், சுதீப்..
அட அதெல்லாம் விடுங்க.. நம்ம தமிழ்நாட்டுல யாரு சூப்பர் ஸ்டார்? என்ன சார் கேள்வி இது? சின்னக் குழந்தையும் சொல்லும். எத்தனை பேர் போட்டி போட்டாலும் எப்பவும் ஒரே சூப்பர்ஸ்டார்தான். அவர் ரஜினிகாந்த்தான்.
அட தமிழ்நாட்டுலதான் இப்படி பார்த்தா… நம்ம சப்பான்லயும் இப்படித்தான் போல. அங்கேயும் ரஜினிதான் சூப்பர் ஸ்டாராக இருக்கார்.
ஜப்பான்ல இருக்கிற நிறைய கிப்ட் ஷாப்ல ரஜினியோட சிலைகள் செம சேல் ஆகுதாம். நிறைய ஜப்பான்கள் ரசிகர்கள் இதை விரும்பி வாங்கிட்டு போறாங்களாம். ஜப்பான் போய் அதை வாங்க முடியாத ரசிகர்கள் அந்த படத்த ட்விட்டரில போட்டு சந்தோஷப்படுறாங்களாம். அப்போ நீங்களும் பார்த்து என்ஜாய் பண்ணுங்க.
Tags:
Cinema
,
சினிமா