காக்கி சட்டை படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படமொன்றில் நடிக்கிறார் தனுஷ்.
அண்ணன், தம்பி என இரட்டை வேடங்களில் தனுஷ் நடிக்கும் இப்படத்தில் அவருக்கு தந்தையாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்.தனுஷ் இரட்டைவேடங்களில் ஒரு வேடம் அரசியல்வாதி வேடம் என்று சொல்லப்படுகிறது.
சிறுவயதிலிருந்தே அவருக்கு அரசியல் பற்றி அவருடைய தந்தை சொல்லித்தருகிறார் என்பதுபோல் கதை இருக்கிறதாம். அந்த வேடத்துக்குப் பொருத்தமாக எஸ்.ஏ.சந்திரசேகர் இருப்பார் என்று நினைத்து அணுகியிருக்கிறார்கள். அவரும் சந்தோசமாக ஒப்புக்கொண்டாராம்.
நவம்பரில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கவிருக்கிறதாம்.
Tags:
காக்கி சட்டை
,
சினிமா
,
தனுஷூக்கு அப்பாவாக
,
தனுஷ்
,
நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகர்