விஜய், சுருதிஹாசன், ஹன்சிகா, ஸ்ரீதேவி மற்றும் சுதீப் போன்ற முக்கியமான தென்னிந்திய நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் புலி திரைப்படம் அடுத்த மாதம் 17 ம் தேதியன்று உலகமெங்கும் வெள்ளித்திரைகளில் வெளியாகிறது.
இந்தியா முழுவதும் சுமார் 3500 திரையரங்குகளில் புலி திரைப்படத்தை வெளியிட இருக்கின்றனர் என்று தகவல்கள் கூறுகின்றன, இந்நிலையில் ஆந்திராவில் புலி திரைப்படம் 8 கோடிக்கு விலை போயிருக்கிறது.
ஆந்திரா மற்றும் தெலுங்கானா பகுதிகளில் புலி படத்தைத் திரையிடும் உரிமையை எஸ்விஆர் பிரைவேட் லிமிடெட் என்னும் நிறுவனம் வாங்கி 8 கோடியை கொட்டிக் கொடுத்து வாங்கியிருக்கிறது.
விஜயின் படங்களிலேயே அதிக விலைபோன படம் புலிதான் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன, இதற்கு முன்பு துப்பாக்கி திரைப்படம் விஜய் படங்களில் ஆந்திராவில் அதிக விலை போன படம் என்ற பெருமையைத் தக்க வைத்திருந்தது.
தற்போது புலி திரைப்படம் துப்பாக்கியின் வரலாற்றை முறியடித்து இருக்கிறது, ஆந்திரா மற்றும் தெலுங்கானா என 2 மாநிலங்களிலும் சுமார் 1400 திரையரங்குகளில் தெலுங்கு பேசவிருக்கின்றது புலி.
Tags:
Cinema
,
சினிமா