தமிழ் சினிமாவில் பெரிய நடிகர்களின் படங்கள் என்றாலே ஏதேனும் விழா காலங்களில் தான் பெரும்பாலும் வெளிவரும். அதேபோல் பள்ளி, கல்லூரிகளுக்கு என்று விடுமுறை என்று படக்குழுவினர்கள் கழுகு போல் பார்த்து, உடனே படத்தை ரிலிஸ் செய்வது ஒரு வழக்கம். அந்த வகையில் சுதந்திர தின வாரத்தில் வெளிவந்து வெற்றி, தோல்வி சந்தித்த படங்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.
பாபா
சூப்பர் ஸ்டார் படையப்பா படத்திற்கு பிறகு நடிக்கவே மாட்டேன் என்ற கட்டாயத்தில் இருந்தார், பல வருடம் கழித்து பாபா என்று படத்தை அவருடைய கதை. வசனத்தில் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் வெளிவந்தது. இப்படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்து ஒரு சில அரசியல் காரணங்களால் படம் தோல்வியை தழுவியது.
அமர்க்களம்
அஜித் தன் திரைப்பயணத்தில் முதன் முதலாக நடித்த ஆக்ஷன் திரைப்படம் அமர்க்களம். இப்படத்தை சரண் இயக்க, அஜித்திற்கு ஜோடியாக ஷாலினி நடித்தார். இப்படம் ஹிட் ஆனது மட்டுமில்லாமல், அஜித், ஷாலினி திருமணம், அஜித்தின் 25வது படம் என பல ஸ்பெஷல் பெற்றது.
தலைவா
விஜய்யின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான படம் தலைவா. இதை விஜய் மட்டுமின்றி அவருடைய ரசிகர்களும் ஒரு நாளும் மறக்க மாட்டார்கள். பல இன்னல்களை கடந்து ஆகஸ்ட் 9ம் தேதி இப்படம் திரைக்கு வந்தது. ஆனால், படம் தமிழகத்தில் தாமதமாக வந்த ஒரே காரணத்தால் தோல்வியை தழுவியது.
அஞ்சான்
சூர்யா மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களும் எதிர்ப்பார்த்த படம் அஞ்சான். டீசர், ட்ரைலர், பாடல்கள் என அனைத்தும் ஹிட் அடிக்க, படம் என்ன காரணமோ ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை. மேலும், பாட்ஷா பட பாணியிலேயே இருந்தது தான் பலருக்கும் பிடிக்கவில்லை என கூறப்பட்டது.
கதை,திரைக்கதை,வசனம்,இயக்கம்
முன்னணி நடிகர்களின் படங்கள் வருகிறது என்றால், பல சிறு பட்ஜெட் படங்கள் கைக்கட்டி தான் நிற்கும். ஆனால், பார்த்திபன் தன் திறமையின் மீது மட்டும் வைத்த நம்பிக்கையால் அஞ்சான் படத்தோடு இந்த படத்தை ரிலிஸ் செய்தார். அஞ்சானுக்கு டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், இதற்கு வாருங்கள் என்று கூற, நடந்தது உங்களுக்கே தெரியும்.
வாலு, VSOP
நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்ததோ, இல்லையோ ஒரு வழியாக சிம்பு நடித்த வாலு படத்திற்கு சுதந்திரம் கிடைத்து விட்டது, இப்படத்துடன் ஆர்யா நடித்த வாசுவும் சரவணனும் ஒன்னா படிச்சவங்க படமும் நேற்று ரிலிஸாக் இப்படங்களின் ரிசல்ட் வரும் நாட்களில் தெரிய வரும்.
Tags:
Cinema
,
Tamil Cinema News
,
சினிமா