இந்தியாவின் மிகப்பெரிய பட்ஜெட் படம், தென்னிந்தியாவில் மிக அதிக வசூலை கொடுத்த படம், மிகப்பெரிய போஸ்டர் உருவாக்கப்பட்டு கின்னஸ் சாதனை செய்த படம், முதன்முதலாக இந்தியில் மட்டும் ரூ.100 கோடி வசூல் செய்த தென்னிந்திய படம் என பல பெருமைகளை பெற்ற 'பாகுபலி' திரைப்படம் 25வது நாளை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்றது. இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி, இந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தயாராகிவிட்டார். 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகம் வரும் 2016ஆம் ஆண்டு ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் எஸ்.எஸ்.ராஜமவுலியின் அடுத்தடுத்த படங்கள் குறித்த செய்திகள் வெளிவந்துள்ளது. பாகுபலி இரண்டாம் பாகத்தை அடுத்து எஸ்.எஸ்.ராஜமவுலி மகேஷ்பாபு நடிக்கும் படம் ஒன்றையும் அதனையடுத்து அஜீத் நடிக்கும் படம் ஒன்றையும் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தையும், பாகுபலி படத்தின் கதாசிரியருமான கே.வி.விஜயேந்திரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
குறிப்பாக அஜீத் நடிக்கவுள்ள படம் குறித்து அவர் கூறும்போது 'தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகவுள்ள இந்த படம் தென்னிந்திய ரசிகர்களை மிகவும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தும் படமாக இருக்கும். முக்கியமாக தமிழகத்தில் தல என்ற மிகப்பெரிய அடையாளத்தை பிடித்துள்ள அஜித்தின் ரசிர்களுக்கு இது ஒரு இனிப்பான செய்தியும் கூட" என்று ராஜமௌலியின் தந்தை கூறியுள்ளார்.
அஜீத்துடன் அல்லு அர்ஜூன் நடிக்கவுள்ள இந்த படம் 2016 இறுதியில் வெளியிடலாம் என்றும் அவர் மேலும் கூறினார்.
Tags:
Cinema
,
சினிமா