Iraivi - Official Trailer | SJ Surya, Vijay Sethupathi, Simha | Karthik Subbaraj, Santhosh Narayanan

11:21 PM |
மேலும் வாசிக்க…

அரசியலில் விஜய் சேதுபதி – அதிர்ச்சியில் ரசிகர்கள்..!!

1:35 AM |
தமிழ் சினிமாவின் தற்போதைய பாக்ஸ் ஆபீஸ் கிங் விஜய் சேதுபதி தான். கடைசியாக இவர் நடித்து வெளியான மூன்று படங்களுமே சூப்பர் ஹிட் அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் இவர் ஒரு பிரபல கட்சியில் இணைந்து விட்டார் என்றும் வருகின்ற தேர்தலில் அந்த கட்சிக்காக அவர் தீவிரமாக பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் ஒரு ஆதாரமற்ற செய்தி வெளியாகி இணையத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தற்போது இத்தகவலை விஜய் சேதுபதி தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்ளது.
மேலும் வாசிக்க…

சேதுபதி திரைவிமர்சனம் - Sethupathi Review

2:29 AM |
தமிழ் சினிமாவில் ஹீரோக்கள் என்ன தான் கேங்ஸ்டர் படம் நடிச்சாலும் சூப்பர் ஸ்டார் முதல் சமீபத்திய ரைசிங் ஸ்டார் வரைக்கும் போலிஸ் ட்ரஸ் அணிந்தால் தான் செம்ம கெத்து. அப்படியிருக்க தொடர்ந்து கிளாஸ் வகை படங்களை செய்து வரும் விஜய் சேதுபதிக்கு மட்டும் மாஸ் காட்ட ஆசை இருக்காதா என்ன?.

அதனால் தான் தன் பேவரட் இயக்குனர் அருணுடன் இணைந்து போலிஸ் லத்தியை கையில் எடுத்திருக்கிறார் சேதுபதி.

கதைக்களம்

படத்தின் ஆரம்ப காட்சியிலேயே ஒரு போலிஸை ஸ்கெட்ச் போட்டு எரித்து விடுகின்றனர். அந்த கொலை விஜய் சேதுபதி போலிஸாக இருக்கும் ஏரியாவில் நடக்க, இந்த கேஸை விஜய் சேதுபதி கையில் எடுக்கிறார்.

போலிஸை கொன்றால் அவன் எவனாக இருந்தாலும் தூக்க வேண்டும் என துடிப்புடன் பல தடயங்களை கண்டுப்பிடிக்க, அந்த ஊரில் மிகப்பெரும் கட்டப்பஞ்சாயத்து நடத்தும் வாத்தியார் என்பவர் தான் இந்த கொலைக்கு காரணம் என தெரிகின்றது.

ஊரே அவரை பார்த்து பயந்து நடுங்கும் நேரத்தில் சேதுபதி தைரியமாக அவரை கைது செய்கின்றார். இந்த அவமானத்திற்காக விஜய் சேதுபதியை பழிவாங்க, செயின் திருட்டு வழக்கில் வரும் சிறுவர்களை துப்பாக்கியை காட்டி மிரட்டி விசாரிக்கும் போது, யாரோ துப்பாக்கியை ரீலோட் செய்து அவர் கையில் கொடுக்கின்றனர்.

அவரும் யதார்த்தமாக சுட, சிறுவன் கழுத்தில் புல்லட் பாய்கின்றது. இதன் பிறகு விஜய் சேதுபதியை தற்காலிக வேலை நிறுத்தம் செய்ய, வாத்தியார் ஆட்டம் அதிகமாகின்றது. பின் வழக்கம் போல் தன் மீசையை முறுக்கி, விஜய் சேதுபதி தன் இரண்டாவது இன்னிங்ஸில் வாத்தியாரை எப்படி பந்தாடுகிறார் என்பதை மாஸ் கமர்ஷியலாக கூறியிருக்கிறார் அருண்.

படத்தை பற்றிய அலசல்

அட..இது விஜய் சேதுபதி தானா!!! என ஆச்சரியப்பட வைக்கின்றது. முறுக்கு மீசை, தைரியமான போலிஸ் ரம்யா நம்பீசனுக்கு அன்பான கணவன், குழந்தைகளுக்கு பாசமுள்ள அப்பா என்று முழு மாஸ் ஹீரோவாகவே மாறிவிட்டார். கிளாஸில் இருந்து மாஸிற்கு ப்ரோமோஷன் கிடைத்து விட்டது சேதுபதி. வாழ்த்துக்கள்.

ரம்யா நம்பீசன் இரு குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்ததற்கே பாராட்டலாம், இளம் நடிகைகள் யாரும் துணிந்து நடிப்பார்களா என்றால் கேள்விக்குறி தான், ‘என் புருஷன் காலையில சண்டைப்போட்டா, மாலையில் என்னை கொஞ்ச வருவான், அதுக்காகவாது நான் அவர் கூட இருக்க வேண்டும்’ என விஜய் சேதுபதிக்கு சப்போர்ட்டாக கலக்கியுள்ளார்.

படத்தின் மிகப்பெரிய ஹைலைட் விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவம் தான், ஒரு மாஸ் போலிஸ் என்றாலும் எந்த இடத்திலும் செயற்கையாக தெரியக்கூடாது என்று கொஞ்சம் மெனக்கெட்டுள்ளனர். குழந்தை முன்பு புகார் கொடுக்க வரும் கணவனை, குழந்தையை வெளியே போகச் சொல்லி விட்டு திட்டுவது, தன் மகள் முன்பு மனைவியை அடித்தததை சமாளிப்பது என யதார்த்த காப் இந்த சேதுபதி.

தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு பல காட்சிகள் மிகவும் ரியலாக உள்ளது, அதை விட ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங், வேகமான திரைக்கதைக்கு செம்ம ப்ளஸ் கூட்டியிருக்கின்றது. தெகிடி படத்தை தொடர்ந்து நிவாஸின் இசை சேதுபதியிலும் மிரட்டல். ஆனால், தீவிர அனிருத் ரசிகராக இருப்பார் போல, விஐபி, காக்கிசட்டை இசையெல்லாம் வந்து போகின்றதே.

க்ளாப்ஸ்

படத்தின் இரண்டாம் பாதி, விறுவிறுவென செல்கின்றது, அதிலும் விஜய் சேதுபதி வீட்டை முற்றுகையிடும் வில்லன் கும்பலை போனிலேயே மிரட்டும் சீன் தியேட்டர் விசில் சத்தத்தில் அதிர்கின்றது.

படத்தில் முதல் பாதியில் ஆங்காங்கே வரும் சின்ன சின்ன டுவிஸ்டுகள், நம் கவனம் ஒரு போலிஸிடம் இருக்கும் போது, அதை அழகாக திசை திருப்பும் காட்சி.

ஸ்ரீகர் பிரசாத்தின் விறுவிறு எடிட்டிங். விஜய் சேதுபதி- ரம்யா நம்பீசன் காதல் காட்சிகள்.

பல்ப்ஸ்

பார்த்து பழகி போன வில்லன், இரண்டாம் பாதியில் யூகிக்க கூடிய டுவிஸ்டுகள்.

படத்தின் முதல் பாதியில் பல காட்சிகள் பெரிய விளக்கம் இல்லாமல் உடனே முடிவது போல் இருக்கும் காட்சியமைப்புகள்.

வில்லன் விஜய் சேதுபதி மீது காட்டும் கோபம், அவர் குடும்பதை தூக்க ப்ளான் போடுவது தான் ஏன் இத்தனை தாமதம் என்று தெரியவில்லை, அதற்குள் கிளைமேக்ஸே நெருங்கிவிடுகின்றது.

மொத்தத்தில் ரவுடி விஜய் சேதுபதியை விட இந்த போலிஸ் சேதுபதி செம்ம கெத்து.

ரேட்டிங்- 3.25/5
மேலும் வாசிக்க…

மடோனா ஒரு நடிப்பு ராட்சஸி! - விஜயசேதுபதி..!!

12:57 AM |
சமீபகாலமாக ஒரு ஹீரோவை இன்னொரு ஹீரோ மனம் திறந்து பாராட்டும் ஆரோக்கியமான நிலை உருவாகியிருக்கிறது. அதோடு விஜயசேதுபதி போன்ற நடிகர்கள் தங்களுடன் நடிக்கும் கதாநாயகிகள் சிறப்பாக நடித்தாலும் அவர்களை பாராட்டத் தவறுவதில்லை.

அந்த வகையில், தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகள சிறப்பாக நடித்தால் அதை மேடைகளில் மனம் திறந்து பாராட்டுவதிலும் விஜயசேதுபதிக்கு நிகர் யாரும் இருக்க முடியாது. தன்னுடன் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், ரம்மி, மெல்லிசை படங்களில் நடித்த காயத்ரியின் நடிப்பை இப்போதுவரை புகழ்ந்துபேசி வருகிறார் விஜய சேதுபதி. முதல் படத்தில் இருந்தே காயத்ரியிடம் ரொம்ப ஜாக்கிரதையாக நடித்து வருகிறேன். நான் கொஞ்சம் அசந்தால் கூட நடிப்பால் என்னை அவர் சாப்பிட்டு விடுவார் அப்படியொரு நடிகை என்று காயத்ரியைப்பற்றி கூறி வருகிறார்.

அவரைத் தொடர்ந்து பீட்சா, சேதுபதி படங்களில் தன்னுடன் நடித்துள்ள ரம்யா நம்பீசனையும், இவர் நடிப்பதே தெரியாது. அவ்வளவு இயல்பாக நடிப்பார். அவருடன் நடிக்கும்போது நமக்கும் நடித்த டயர்டு தெரியாது. வீட்டில் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது போலவே இருக்கும். அப்படியொரு நேச்சுரலான நடிகை என்று கூறி வருபவர், இப்போது காதலும் கடந்து போகும் படத்தில் தன்னுடன் நடித்துள்ள பிரேமம் மடோனாவின் நடிப்பைப்பற்றியும் பெருமையாக பேசி வருகிறார்.

அதாவது, பிரேமம் படத்தில் அவர் அருமையாக நடித்திருந்தார். ஆனால் இந்த படத்தில் அதையும் தாண்டி அற்புதமாக நடித்திருக்கிறார். சில காட்சிகளில் அவருடன் இணைந்து நடித்தபோது அவரது அசத்தலான பர்பாமென்ஸைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறேன். அப்படியொரு நடிப்பு ராட்சஸி. இதுபோன்ற சிறந்த நடிகைகளுடன் நடிப்பதால் படத்துக்குப்படம் என்னை நானும் மெருகேற்றிக் கொள்ள முடிகிறது என்கிறார் விஜயசேதுபதி.
மேலும் வாசிக்க…

தர்மதுரை படக்குழுவை ஆச்சர்யப்படுத்திய விஜய் சேதுபதி..!!

9:33 PM |
சீனு ராமசாமி இயக்கிவரும் தர்மதுரை படத்துக்காக நடிகர் விஜய் சேதுபதி வில்லனுடன் மோதும் சண்டைக்காட்சி ஒன்று சமீபத்தில் தத்ரூபமான முறையில் எடுக்கப்பட்டது. அப்போது படப்பிடிப்பில் எதிர்பாரா விதமாக விஜய் சேதுபதியின் கண்ணில் அடிப்பட்டு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து அவரை அருகில் இருந்த மருத்துவமனையில் படக்குழுவினர் சேர்த்தனர். இவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், இவர் தொடர்ந்து ஓய்வெடுக்க வேண்டும் என அறிவுரை வழங்கினர். ஆனால் தன்னால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஓய்வெடுக்காமல் தொடர்ந்து நடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார் விஜய் சேதுபதி.
மேலும் வாசிக்க…

நான் நலமாக இருக்கிறேன்: விஜய் சேதுபதி..!!

2:25 AM |
விஜய் சேதுபதி தற்போது தர்மதுரை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை சீனுராமசாமி இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடைபெறுகிறது. இதில் போலீஸ் நிலையம் முன்பு ரவுடிகளுடன் விஜய் சேதுபதி மோதுவது போல் ஒரு சண்டை காட்சியை படமாக்கியிருக்கிறார்கள்.

அப்போது விஜய் சேதுபதியின் இடது கண்ணில் அடிபட்டிருக்கிறது. இதனால் வலி தாங்காமல் அலறிய விஜய் சேதுபதிக்கு கண் வீங்க ஆரம்பித்திருக்கிறது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள். அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்திருக்கிறார்கள்.

தற்போது விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதிக்கபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதை விஜய் சேதுபதி தரப்பினர் மறுத்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு அடிபட்டு ஐந்து நாட்கள் ஆகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கவில்லை. வெறும் சிகிச்சைக்கு மட்டும்தான் சென்றிருந்தார் என்று அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
மேலும் வாசிக்க…

நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதி..!!

9:53 PM |
நடிகர் விஜய் சேதுபதி இப்போது, தர்மதுரை என்ற படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்தை சீனுராமசாமி டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பு தேனியில் நடைபெறுகிறது. போலீஸ் நிலையம் முன்பு ரவுடிகளுடன் விஜய் சேதுபதி மோதுவது போல் ஒரு சண்டை காட்சியை படமாக்கினார்கள்.ஸ்டண்ட் நடிகர் ஒருவர் விஜய் சேதுபதியை ஓங்கி குத்துவது போல் நடித்தபோது, விஜய் சேதுபதியின் இடது கண்ணில் நிஜமாகவே குத்து விழுந்தது.

விஜய் சேதுபதி வலி தாங்காமல் அலறினார். அவருடைய இடது கண் முழுவதும் சிவப்பாக மாறியது. கண் வீங்க ஆரம்பித்தது. உடனடியாக அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்கள்.அவருக்கு டாக்டர்கள் அவசர சிகிச்சை அளித்து தூங்க வைத்தார்கள். தூங்கி விழித்த பிறகும் கண்ணில் பயங்கர வலி இருப்பதாக விஜய் சேதுபதி கூறியதால் அவரை மதுரையில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அழைத்து போனார்கள்.

 அங்கு அவருடைய கண் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது. அதில் அவருடைய கண் நரம்பில் வீக்கம் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள்.சிகிச்சைக்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால், தர்மதுரை படப்பிடிப்பு அன்று ரத்து செய்யப்பட்டது. மறுநாள் சிகிச்சை முடிந்து விஜய் சேதுபதி வீங்கிய கண்ணுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்தார்.
மேலும் வாசிக்க…

அனிருத்தின் புதிய பரபரப்பு - ஹே மாமா - விஜய் சேதுபதிக்காக அனிருத்..!!

12:22 AM |
மேலும் வாசிக்க…

இணையத்தில் பட்டையை கிளப்பும் விஜய்சேதுபதியின் "சேதுபதி" பட டீசெர்..!!

10:18 PM |
மேலும் வாசிக்க…

‘நானும் ரௌடிதான்’ படத்தின் அசத்தும் டிரைலர் – வீடியோ!

12:42 AM |



‘நானும் ரௌடிதான்’ படத்தின் அசத்தும் டிரைலர் – வீடியோ!

Naanum Rowdy Dhaan - Official Trailer | Vijay Sethupathi, Nayanthara | Anirudh | Vignesh Shivan




மேலும் வாசிக்க…
2015 Thediko.com