ரஜினியின் ஈர்ப்பால் மட்டுமே சினிமாவுக்கு வந்தேன்: சிவகார்த்திகேயன்..!!

11:29 PM |
சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் ரஜினி முருகன். இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். பொன்ராம் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படம் தற்போது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

சிவகார்த்திகேயன் ரஜினியின் தீவிர ரசிகன். அதனால் தான் தற்போது வெளியாகியுள்ள படத்திற்கு ரஜினி முருகன் பெயரை பரிந்துரை செய்ததாக தகவல் வெளியானது. தற்போது ரஜினியை பற்றி மேலும் சுவாரஸ்யமான செய்தியை பகிர்ந்துள்ளார்.

அவர் கூறும்போது,நான் ரஜினியின் தீவிர ரசிகன். சிறு வயதில் இருந்து ரஜினி படங்களை பார்த்துதான் வளர்ந்தேன். சினிமாவிற்கு வர முக்கிய காரணமே ரஜினிதான்.

என் வாழ்க்கையில் என் அம்மா எவ்வளவு முக்கியமோ, அந்தளவிற்கு ரஜினியும் என் மனதில் இருக்கிறார். தற்போது ரஜினி நடிக்கும் படங்களான கபாலி, 2.ஓ படங்கள் வெளியாகும் போது எங்கிருந்தாலும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்துவிடுவேன் என்றார்.
மேலும் வாசிக்க…

சிவகார்த்திகேயன் மீது லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டம்..!!

6:02 AM |
'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' பாடலை வணிக ரீதிக்காக உபயோகப்படுத்தி விட்டு அதற்கு காரணம் என என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்? என்று நடிகர் சிவகார்த்திகேயனுக்கு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் 'ரஜினி முருகன்' படத்தில் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா' பாடல் மிகவும் பிரபலம் அடைந்துள்ளது.  இதனிடையே, படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயனிடம், 'என்னம்மா' பாடல் குறித்து கேள்வி எழுப்பப்பட்டப் போது "அப்பாடல் 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா’ என்று கலாய்க்கப்பட்ட நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது" என்று பதிலளித்துள்ளார்.
இந்நிலையில், சிவகார்த்திகேயனின் இந்த பதிலுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'என்னம்மா பாடல்' கலாய்ப்பு நிகழ்ச்சியில் இருந்து எடுக்கப்பட்டது என்றும், உண்மையான வசனத்துக்கு சம்பந்தமில்லை என்றும் சிவகார்த்திகேயன் விளக்கம் அளித்துள்ளார். அப்படி என்றால் கலாய்ப்பு நிகழ்ச்சி ஒரு சிறந்த நிகழ்ச்சியா? சிவகார்த்திகேயனின் கலாய்ப்பு எல்லை மீறி போய்விட்டது. இதனால் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன்.

வணிக ரீதிக்காக உபயோகப்படுத்தி விட்டு அதற்கு காரணம் என என்னைக் கலாய்த்தவர்களுக்கு கிரெடிட் தருவது என்பது எந்த விதத்தில் நியாயம்? 'என்னம்மா' பாடலுக்கு நான் தான் காரணம் என்று சொன்னால் நான் பணம் கேட்டு விடுவேனா?. கவலை வேண்டாம் சிவகார்த்திகேயன், இதை விட எனக்கு உருப்படியான நிறைய வேலைகள் இருக்கிறது" என்று காட்டமாக கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

விஜயின் கத்தி மப் சீனை ரஜனிமுருகன் படத்தில் கலாய்த்த சிவா வீடியோ

3:13 AM |
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com