தெறி படம் ஓடிய திரையரங்கில் மிளகாய் பொடி வீச்சு – ரசிகர்கள் வெளியேற்றம்..!!

2:02 AM |
விஜய் நடிப்பில் வெளியான தெறி திரைப்படம் உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் கனடாவில் உள்ள Cineplex திரையரங்க வளாகத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று இப்படம் திரையிட்டப்போது, சில மர்ம நபர்கள் உள்ளே புகுந்து ரசிகர்கள் மீது மிளகாய் பொடி வீசினர்.

இதனால் அதிர்ச்சியடைந்த திரையரங்க நிர்வாகிகள், படத்தை உடனடியாக நிறுத்தி ரசிகர்களை தியேட்டரில் இருந்து வெளியேற்றினர். இதில் மூன்று பேர் லேசாக காயமடைந்துள்ளனர். மர்ம நபர்களின் நோக்கம் தெரியாத திரையரங்க நிர்வாகிகள், மற்ற திரையரங்குகளிலும் தெறி படத்தின் காட்சிகளை ரத்து செய்துள்ளனர்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com