அஜித் தான் உண்டு, தன் வேலை உண்டு என்று இருந்தாலும் தன் மீது அன்பு கொண்டவர்களிடம் சகஜமாக பழகுவார். அவர்களின் தேவையறிந்து தானாகவே உதவ கூடியவர்.
இந்நிலையில் அஜித்தின் ‘வேதாளம்’ படத்தை இயக்கி வருகிறார் சிவா. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தை சிவா இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அஜித் மற்றும் சிவாவை சமீபத்தில் சந்தித்தார் சிவகார்த்திகேயன். அந்த படங்களும் இணையத்தில் வெளியானது. அந்த சந்திப்பில் அவர்கள் பேசிக் கொண்ட சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
இச்சந்திப்பில் மதுரை விமான நிலையத்தில் நடந்த தாக்குதல் பற்றி சிவகார்த்திகேயனிடம் கேட்டுள்ளார் அஜித். “பொது இடத்தில் கொஞ்சம் அதிக கவனத்துடன் இருங்கள்” என்று அக்கறையுடன் கூறினாராம். மேலும், சிவகார்த்திகேயன் தற்போது நடித்து வரும் படங்களை பற்றியும் கேட்டறிந்தாராம்.
அஜித்தை போலவே இச்சம்பவம் குறித்து இதற்கு முன்பு சிவகார்த்திகேயனிடம் அக்கறையாக பேசியவர் ரஜினிகாந்த் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…