பல்கேரிய ஸ்டண்ட் கலைஞர்களுடன் மோதிய 'தெறி' விஜய்..!!

1:58 AM |
இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக ஏற்கனவே தகவல் வந்ததை அடுத்து தற்போது ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களின் உதவியொடு அதிர வைக்கும் கிளைமாக்ஸ் சண்டைக்காட்சிகள் நடந்து வருவதாக இப்படத்தின் ஒளிப்பதிவு இயக்குனர் ஜார்ஜ் வில்லையம்ஸ் தகவல் அளித்துள்ளார்.

'பாகுபலி', 'மிஷன் இம்பாசிபிள் 5' ஆகிய படங்களுக்கு சண்டைப்பயிற்சி செய்த ஹாலிவுட் கலைஞர் Kalayon Vodenincharov மற்றும் திலீப் சுப்பராயன் ஆகியோர்களின் மேற்பார்வையில் பல்கேரியாவில் வந்திருந்த ஸ்டண்ட் கலைஞர்களுடன் விஜய் மோதும் காட்சிகள் அதிர வைக்கும் வகையில் படமாக்கப்பட்டதாகவும்,  இந்த சண்டைக்காட்சி 'தெறி' படத்தை தெறிக்க வைக்கும் என்றும் ஜார்ஜ் தன்னுடைய சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

விஜய், சமந்தா, எமிஜாக்சன், சத்யராஜ், மகேந்திரன் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை அட்லி இயக்கி வருகிறார்.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com