விஜய் – ஜெயம் ராஜா இணையும் விஜய் 61..!!

12:03 AM |
அட்லி இயக்கத்தில் விஜய் நடித்துகொண்டிருக்கும் படம் விஜய் 59.

இதில் இவருக்கு ஜோடியாக சமந்தா நடித்திருக்கிறார். இதையடுத்து விஜயின் 60ஆவது படத்தை எஸ்.ஜே சூர்யா இயக்க இருக்கிறார். இதற்குமுன் விஜய்யை வைத்து குஷி மூலம் மாபெரும் ஹிட் கொடுத்தவர் எஸ் ஜே சூர்யா என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய்யின் 60ஆவது படத்தை தொடர்ந்து 61 வது படத்தை இயக்கபோவது ஜெயம் ராஜா என தெரிகிறது. விஜய்க்கு ஏற்க்கனவே கதை சொல்லிவிட்டதாகவும் சொல்லப்படுகிறது. விஜய்யும், ஜெயம் ராஜாவும் வேலாயுதம் படத்திற்கு அடுத்து இணையும் படம் விஜய் 61 ஆக இருக்கும் என தெரிகிறது.

ஜெயம் ராஜா தனி ஒருவன் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு இயக்கும் விஜய் 61, விஜய் ரசிகர்களிடம் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags: விஜய் 61 விமர்சனம் , விஜய் 61 , விஜய் 61 ரிலீஸ் தேதி , விஜய் 61 திரை விமர்சனம்
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com