’வெடிக்கும் சர்ச்சை’ - சரத்குமார், ராதாரவி நடிகர் சங்கத்திலிருந்து அதிரடி நீக்கம்..!!

1:15 AM |
சென்னையில் தென்னிந்திய நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தின் முடிவில் மூன்று நடிகர்களை சங்கத்திலிருந்து தற்காலிகமாக நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில், தென்னிந்திய நடிகர் சங்க முன்னாள் தலைவர் சரத்குமார், ராதாரவி, வாகை சந்திரசேகர் ஆகியோரை அதிரடியாக நீக்கியுள்ளனர். இவர்கள் மூவரும் நடிகர் சங்கத்தில் ஊழலில் ஈடுப்பட்டதால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நடிகர் சங்கம் விளக்கம் அளித்துள்ளது.

மேலும், சரத்குமார் நடிகர் சங்க தலைவராக இருந்த போது, ஏராளமான முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், அதுகுறித்த கேள்விகளுக்கு இன்னும் அவர்கள் தரப்பில் இருந்து தெளிவான பதில் தராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும், காவிரி பிரச்சனையில் தமிழக முதல்வர் ஜெயலலிதா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் முழுமையான ஆதரவு அளிப்பது, கன்னட நடிகர்களின் பேச்சுக்கு கண்டனம் உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் கூட்டத்தில், நிறைவேற்றப்பட்டது.இதில் பொதுச்செயலாளர் விஷால், துணை தலைவர் பொன்வண்ணன், கருணாஸ், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

இராஜபாளையம் பெண்களின் அழகை ரசித்தேன். விஷால்..!!

11:10 PM |
விஷால், ஸ்ரீதிவ்யா, நடிப்பில் வெளியாகவுள்ள 'மருது' திரைப்படத்தின் பெரும்பாலான பகுதியின் படப்பிடிப்புகள் இராஜபாளையத்தில்தான் நடைபெற்றது. இயக்குனர் முத்தையாவின் சொந்த ஊர் என்பதால் அந்த ஊரின் இண்டு இடுக்கெல்லாம் அவருக்கு அத்துபடி, என்றும், அந்த ஊரையே அவர் ஒரு பிலிம் சிட்டியாக மாற்றிவிட்டதாகவும் விஷால் கூறியுள்ளார்.

மேலும் ராஜபாளையம் என்றாலே நாய்களுக்குப் புகழ்பெற்றது என்று கூறுவார்கள். ஆனால் அந்த ஊர் அழகான பெண்களுக்கும் பெயர் பெற்றது. அங்கு அழகழகான பெண்களைக் கண்டு வியந்தேன். ரசித்தேன்.

இந்த படத்தில் ராதாரவி, சூரி ஆகிய இருவருமே முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். ராதாரவியுடன் நடிப்பதில் எனக்கு எந்த தயக்கவும் இருந்ததில்லை. நடிகர் சங்க தேர்தலை அவர் ஒரு கோணத்தில் பார்த்தார். நான் ஒரு கோணத்தில் பார்த்தேன். அவ்வளவுதான்

மேலும் இந்த படத்தில் வில்லனாக நடித்திருக்கும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பில் பேய் என்றும் ராட்சசன் என்றும் கூறலாம். அந்த அளவுக்கு அவர் வெளுத்து வாங்கியுள்ளார். இந்த படம் எனக்கு மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் திருப்தியான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இவ்வாறு விஷால் கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

மருது திரைவிமர்சனம் - Marudhu Review

2:38 AM |
விஷால் சமீப காலமாக சீவிவிட்ட காளையின் கொம்பு போல் கூராக உள்ளார். நடிகர் சங்க வெற்றி, திருட்டு விசிடி அதிரடி முடிவு என பம்பரமாக சுழலும் இவருக்கு படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரம் அமைந்தால் எப்படியிருக்கும்?.

அப்படி ஒரு கதாபாத்திரத்தை குட்டிபுலி, கொம்பன் வெற்றிகளை தொடர்ந்து முத்தையா விஷாலுக்காக ரெடி செய்துள்ள படம் தான் மருது.

கதைக்களம்

ராஜபாளையத்தில் பெரிய தலைக்கட்டு ராதாரவி, இவர் கை காட்டியவர் தான் அந்த ஊரில் பல பதவிகளை பிடிக்கிறார்கள். ராதாரவியின் இடது கை போல் அவர் சொல்லும் அத்தனை அடிதடி, கட்டப்பஞ்சாயத்து வேலைகளை முடித்துக்கொடுப்பவர் ஆர்.கே.சுரேஷ்.

இவரை அடுத்த MLA ஆக்க ராதாரவி முயற்சி செய்து வருகிறார். இதே ஊரில் லோட் மேனாக (மூட்டை தூக்குபவர்) விஷால், தன் அப்பத்தாவின் வளர்ப்பில் வீரமாகவும், ஊரில் எந்த தவறு நடந்தாலும் முத்தையாவின் டெம்ப்ளைட் ஹீரோவாக வலம் வருகிறார்.

ஸ்ரீதிவ்யாவை ஒரு கோவிலில் பார்க்க, பார்த்தவுடன் மோதல் பிறகு காதல் என விஷாலின் வாழ்க்கை சந்தோஷமாக செல்ல, ஸ்ரீதிவ்யாவின் அம்மாவை ஒரு சில காரணங்களுக்காக ஆர்.கே.சுரேஷ் கொலை செய்தது விஷாலுக்கு தெரிய வருகிறது.

அவர் இறந்ததற்கு ஏதோ ஒரு விதத்தில் விஷாலும், அவருடைய அப்பத்தாவும் காரணமாக அமைய, பிறகு என்ன அப்பத்தா விஷாலுக்கு கொம்பை சீவி விட விஷால் ஆர்.கே.சுரேஷின் அநியாயங்களை அடக்குவது மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

விஷால் 6 அடி உயரம், 5 பேர் இல்லை 50 பேர் வந்தாலும் அடித்து நொறுக்குகிறார், அதை நம்பவும் முடிகின்றது. முரட்டு இளைஞன், பெண்களுக்கு மரியாதை கொடுப்பவர், அப்பத்தாவிற்கு செல்ல பேரன், அநியாயங்களை தட்டி கேட்பவர் என அனைத்திலும் புகுந்து விளையாடியுள்ளார்.

ஸ்ரீதிவ்யா முதன் முதலாக நிறைய நடிக்கும் வாய்ப்பு உள்ளது. இதுநாள் வரை வெறும் ஸ்கீரின் வந்து மட்டும் போகும், ஸ்ரீதிவ்யா இதில் விஷாலையே கை நீட்டி அடிக்கும் அளவிற்கு தைரியமான பெண். தென் மாவட்டத்து பெண்களுக்கே உரிய பாவனை.

யாருயா இந்த அப்பத்தா? என்று தான் படம் முடிந்து வெளியே வருபவர்கள் பலரும் கேட்கும் கேள்வி. படத்தின் மற்றொரு ஹீரோ என்று கூட கூறலாம், காமெடியில் ஆரம்பித்து விஷாலுக்கு வீரம் புகுட்டும் காட்சி வரை சரவெடி தான். அதிலும் விஷாலை, ஸ்ரீதிவ்யாவை காதலிக்க வைக்கும் காட்சி காமெடி கலக்கல். அதுமட்டுமில்லாமல், ‘என் பேரனுக்கு எந்த பதவியும் வேண்டாம், அவன் நினைச்சா எந்த பதவிலையும் அவனே போய் உட்காருவான்’ என பன்ச் வசனம் வேறு, தெரிந்து தான் பேசினாரா என்பது கேள்விக்குறி.

சூரி காமெடி நீண்ட நாட்களுக்கு பிறகு சிரிப்பு வருகின்றது, கிராமத்து கதை என்றாலே சூரி கால்ஷிட் தான் போல இனி, அதே நேரத்தில் கிளைமேக்ஸில் செண்டிமெண்ட் காட்சிகளிலும் கலங்க வைத்துள்ளார். இதையெல்லாம் விடுங்க, ராதாரவி-விஷால் காம்பினேஷன் படத்தில் உள்ளது.

பலரும் எதிர்ப்பார்த்த காட்சி, பேசிய அளவிற்கு தான் இல்லை என்றாலும், விஷால் மனதில் தோன்றியதை படத்தில் கேட்டு விட்டார். ஆனால், முத்தையா இனி இதுப்போன்ற கதைகளையே தொடர்ந்து எடுக்க வேண்டுமா? என கொஞ்சம் யோசிக்க வேண்டும். ஏனெனில் அம்மா செண்டிமெண்ட், மாமனார் செண்டிமெண்ட், தற்போது அப்பத்தா செண்டிமெண்ட் ஒரே பாணியில் தான் அனைத்து படமும் இருக்கின்றது.

இந்த ஊரில் போலிஸ் எல்லாம் இருக்கிறார்களா? என்று கேட்கும் அளவிற்கு உள்ளது. சுரேஷ் அவர் வீட்டு ஆட்களை தவிர எல்லோரையும் வெட்டுகிறார், குத்துகிறார், லாஜிக் அத்துமீறல். இத்தனை வன்முறையா தேவையா முத்தையா சார்?. டி.இமான் இசையில் பாடல்கள் தாளம் போட வைத்தாலும் பின்னணி இசை காதை பதம் பார்க்கின்றது. வேல்ராஜ் ஒளிப்பதிவு என்று யாராவது சொன்னால் தான் தெரியும், ஏதோ சிறு பட்ஜெட் படம் போல் உள்ளது.

க்ளாப்ஸ்

விஷால் கிராமத்து இளைஞனாக இறங்கி அடித்துள்ளார், விஷால்-ராதாரவி சம்மந்தப்பட்ட காட்சிகள்.

அப்பத்தா முழுப்படத்தையும் தாங்கி செல்கிறார். தமிழ் சினிமாவிற்கு குணச்சித்திர கதாபாத்திரத்திற்கு நல்ல வரவேற்பு.

படத்தின் முதல் பாதி சூரி காமெடி, விஷால் அடிதடி என விறுவிறுப்பாக செல்கின்றது. குறிப்பாக பெண்களை மதிக்கு வசனங்கள்.


பல்ப்ஸ்

லாஜிக் மீறல், சமூகத்திற்கு சில தேவையற்ற குறியீடு வசனங்கள், கண்டிப்பாக முத்தையா இதை அடுத்த படத்தில் மாற்ற வேண்டும்.

இரண்டாம் பாதி யூகிக்க கூடிய பல காட்சிகள், கிளைமேக்ஸ் உட்பட, பார்த்து பழகி போன கதைக்களம்.

மொத்தத்தில் மருது ஜனரஞ்சக படங்களை விரும்புவோர்களுக்கு ஒரு விருந்தாக இருக்கலாம்.


ரேட்டிங்- 2.5/5
மேலும் வாசிக்க…

தல குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல் இணையதளத்தில் வைரலாக பரவிவருகிறது..!!

12:27 AM |
தல அஜித் படம் வெளிவந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அவருடைய அடுத்த படம் வெளியாக கிட்டத்தட்ட இன்னும் ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகும். ஆனால் தல பற்றிய செய்தி மட்டும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கின்றது.

சமீபத்தில் ராதாரவி ‘தல’ குறித்து கூறியுள்ள நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் தேவா, தல குறித்து கூறியுள்ள ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது

தேவா கூறியுள்ளதாவது: தலக்கனமே இல்லாதவர் தல. நான் வெளிநாடுகளுக்கு பல இசை நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்த போது பல சீட்டுக்களில் அஜித் பாடல் பாடும்படி வேண்டுகோள் குவியும். உலகம் முழுவதிலும் உள்ள தனது ரசிகர்களுக்கு அன்பை மட்டுமே பரிசாக கொடுப்பவர் அஜித். அவருடைய அன்பும் பணிவும்தான் அவரை இந்த உயர்ந்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.

மேலும் வாசிக்க…

ஆரம்பத்திலிருந்து அஜித்திற்கு மட்டும் தான் மரியாதை கொடுப்பேன், ஏனென்றால்? ராதாரவி ஓபன் டாக்

3:36 AM |
நடிகர் சங்க தேர்தலின் போது ராதாரவி பேசியது எல்லாம் அனைவரும் அறிந்ததே. அவர் எல்லோரையும் பெயர் சொல்லி தான் அழைப்பார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் கூட இதுக்குறித்து இவர் ‘நான் என் சக நடிகர்கள் அனைவரையும் பெயர் சொல்லி தான் அழைப்பேன்.

ஆனால், அஜித்தை மட்டும் தான் இன்று வரை சார் என்று அழைக்கிறேன்.

ஏனெனில் அவரின் உதவி மனப்பான்மை என்னை மிகவும் கவர்ந்தது, யார் எந்த உதவி கேட்டாலும் லட்சம் லட்சமாக அள்ளிக்கொடுப்பார், அவரை போலவே தற்போது சூர்யா கூட S3 படப்பிடிப்பில் ஒருவரின் கல்விக்காக ரூ 1 லட்சம் கொடுத்தார்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

ஜில் ஜங் ஜக் திரை விமர்சனம் - Jil Jung Juk Review

9:40 PM |
நடிகர் சித்தார்த் ‘ஏடாகி எண்டர்டைன்மெண்ட்’ எனும் பட நிறுவனம் ஆரம்பித்து சொந்தமாக தயாரித்து நாயகராக நடித்தும் வெளிவந்திருக்கும் படம் தான் “ஜில்.ஜங். ஜக்.”

ஒரு பெரும் போதை பொருள் கடத்தல் கும்பல் தலைவன் தெய்வா எனும் தெய்வநாயகம். பெட்ரோல் தட்டுப்பாடு, இன்னும் சில அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடுகளால் 2020-ம் ஆண்டில் தொழில் முடங்கிப் போன அந்த தாதா, தன்னிடம் கடைசி, கடைசியாக இருக்கும் நான்கு கோடி மதிப்புள்ள சரக்கை ஹைதராபாத்துக்கு வரும் சைனிஸ் பார்ட்டியிடம் கைமாற்றி விட்டு காசு பார்க்க நினைக்கிறார்.

ஆனால், போட்டியாளர்கள் கண்களிலும், போலீஸீன் கண்களிலும் மண்ணைத்துவி விட்டு சரக்கை ஹைதராபாத்துக்கு கொண்டு செல்ல தன் பழைய ஆட்களையும், பழைய பார்முலாவையும் நம்பாத தெய்வநாயகம், தேர்ந்தெடுக்கும் மூன்று பேரும், ஒரு காரும், அது சார்ந்த காமெடி கதையும்தான் ஜில் ஐங் ஜக் மொத்தப் படமும்!

நாஞ்சில் சிவாஜி எனும் ‘ஜில்’லாக சித்தார்த், தில்லாக இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்து நடித்து கூடவே இப்படத்தை தயாரித்தும் இருக்கிறார்.

கதைப்படி, பேச்சில் வல்லவரான சித்தார்த் படம் முழுக்க பேசும் வார்த்தைகள் புரியாது இருப்பது ரசிகனை நெளிய வைக்கிறது. என்றாலும் நடிப்பில் நிறையவே ஸ்கோர் செய்திருப்பதற்காக சித்தார்த்தை பாராட்டலாம்.

சித்தார்த்தின் நண்பர்களாக ஜங் – ஜங்குலிங்கமாக வரும் அவினாஷ்ரகுதேவனுக்கும், ஜக் – ஜாகுவார் ஜகன்னாக வரும் சனந்துக்கும் தனக்கு உரிய முக்கியத்துவத்தை கதையிலும் காட்சி படுத்தலிலும் கொடுத்திருப்பதற்காக தயாரிப்பாளர் சித்துவை பாராட்டலாம்.

ரோலெக்ஸ் ராவுத்தராக வரும் டத்தோ ராதாரவி, தெய்வா எனும் தெய்வநாயகமாக வரும் ஆர்-அமரேந்திரன், அட்டாக் ஆல்பர்ட் டாக வரும் எம்.ஜி.சாய்தீனா, மருந்து -கே.பகவதி பெருமாள், நாசிம்மன் – நாகா, பைந்தமிழ் – பிபின், காளி – ஷரத், ஜக் கின் அப்பா ஆர் எஸ்.சிவாஜி, ராவுத்தர் அடியாள் – விஜய முத்து, குணா-ஆர்.பிரவீன், நடிகை சோனு சாவந்த்தாக வரும் ஜாஸ்மின்பாஸின் உள்ளிட்ட நட்சத்திரங்களில் எல்லோருமே தேவைக்கு அதிகமாக நடித்து ரசிகனின் பொறுமையை சோதிக்கின்றனர்.

ஆறுதல், படம் முழுக்க பின்க் கலரிலும் ஆஷ் கலரி லும் வரும் அந்த இரண்டு ஒல்டு மாடல் கார்கள் மட்டிலும் தான்.

சிவஷங்கரின் கலை இயக்கம், குருட்ஸ் ஸ்னை டரின் படத்தொகுப்பு, ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு, தீரஜ் வைத்தியின் எழுத்து ,இயக்கம் உள்ளிட்டவைகளில் ஸ்ரேயா ஸ்கிருஷ்ணாவின் ஒளிப்பதிவும், சிவஷங்கரின் கலை இயக்கமும் திரும்பி பார்க்க வைக்கின்றன.

ஆக மொத்தத்தில், ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும் காமெடி எனும் போர்வையில் ‘ஜில்.ஜங்.ஜக்’ கடித்திருப்பது டிராஜிடி!

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் சித்தார்த்!
மேலும் வாசிக்க…

கவுதம் கார்த்திக் படத்திற்காக இளையராஜா இசையில் பாடிய கமல்ஹாசன்..!!

10:34 PM |
குளோபல் மீடியா ஒர்க்ஸ் சார்பில் விஜய் பிரகாஷ் தயாரிக்க இசைஞானி இளையராஜா இசையில் ராஜதுரை இயக்கத்தில் முதன் முறையாக கார்த்திக் மற்றும் கௌதம் கார்த்திக் இணைந்து நடிக்கும் படம் “முத்துராமலிங்கம்”.

இப்படத்தில் கௌதம் கார்த்திக்கிற்காக இசைஞானி இளையராஜா இசையில் “தெற்கு தெச சிங்கமடா, முத்துராமலிங்கமடா, சுத்த பசும்பொன் தங்கமடா” என்று தொடங்கும் பாடலை உலகநாயகன் கமல்ஹாசன் பாடியுள்ளார்.

நடிகை அசினின் அப்பாவை கழற்றிவிட்டுவிட்டு அசினுடன் கமல் ரூம் போட்ட கதை..!! 

மேலும் இப்படத்திற்கு ஒரு சிறப்பம்சமுண்டு, 21 ஆண்டுகளுக்கு பிறகு பஞ்சு அருணாசலம் இசைஞானி இளையராஜாவின் இசைகேற்ப பாடல் வரிகள் எழுதியுள்ளார். முத்துராமலிங்கம் படம் மூலமாக மூன்று தலைமுறைகளுக்கு (முத்துராமன், கார்த்திக், கவுதம் கார்த்திக்) பாடல் எழுதியுள்ளார் பஞ்சு அருணாசலம். இப்படத்தின் வாயிலாக பஞ்சு அருணாசலத்துடன் சேர்ந்து இசைஞானி இளையராஜா 40 ஆண்டுகாலமாக திரையுலகில் பவனி வருகின்றனர்.

கவுதம் கார்த்திக், பிரியா ஆனந்த் நடிக்கும் இப்படத்தில் சுமன், ராதாரவி, விவேக், சுகன்யா, ரேகா, சிங்கம்புலி, சிங்கமுத்து நடிக்கவுள்ளனர்.

குளோபல் மீடியா ஒர்க்ஸ் விஜய் பிரகாஷ் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இப்படத்தை ராஜதுரை கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கவுள்ளார். ஒளிப்பதிவு செந்தில்குமார். இப்படத்தின் நிர்வாக மேற்பார்வை கமுதி செல்வம்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com