தல அஜித் படம் வெளிவந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டது. அவருடைய அடுத்த படம் வெளியாக கிட்டத்தட்ட இன்னும் ஆறு மாதங்களுக்கும் மேல் ஆகும். ஆனால் தல பற்றிய செய்தி மட்டும் தினமும் வெளிவந்து கொண்டே இருக்கின்றது.
சமீபத்தில் ராதாரவி ‘தல’ குறித்து கூறியுள்ள நிலையில் தற்போது பிரபல இசையமைப்பாளர் தேவா, தல குறித்து கூறியுள்ள ஒரு கருத்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது
தேவா கூறியுள்ளதாவது:
தலக்கனமே இல்லாதவர் தல. நான் வெளிநாடுகளுக்கு பல இசை நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்த போது பல சீட்டுக்களில் அஜித் பாடல் பாடும்படி வேண்டுகோள் குவியும். உலகம் முழுவதிலும் உள்ள தனது ரசிகர்களுக்கு அன்பை மட்டுமே பரிசாக கொடுப்பவர் அஜித். அவருடைய அன்பும் பணிவும்தான் அவரை இந்த உயர்ந்த நிலைக்கு எடுத்து சென்றுள்ளது.
Tags:
Cinema
,
அஜித்
,
சினிமா
,
தல
,
தேவா
,
ராதாரவி