அவர்களுக்காகவே இரண்டாவது திருமணம் செய்தேன், முதன் முறையாக வெளிப்படையாக கூறிய முத்து..!!

10:22 PM |
முத்து தன் மனைவி இழப்பால் மிகவும் வேதனையில் இருந்தார். இதை தொடர்ந்து மிகவும் கஷ்டமான கருத்துக்களாக பகிர்ந்தார்.

திடிரென்று ஒருநாள் தனக்கு திருமணம் என்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார், இதை தொடர்ந்து பலரும் அவரை திட்ட, அதை நீக்கினார்.

தற்போது இதற்கு விளக்கம் கொடுத்துள்ளார், இதில் ‘என் மனைவி மீது நான் எத்தனை அன்பு வைத்திருந்தேன் என என் நண்பர்களுக்கு தெரியும்.

நானும் பல நாட்களாக இதனால் மிகவும் மனவருத்தத்தில் இருக்க, சில கருத்துக்கள் என்னை மிகவும் பாதித்தது, அதனாலேயே என் இரண்டாவது திருமண புகைப்படத்தை பேஸ்புக்கிலிருந்து நீக்கினேன்.

மனைவி இல்லாமல் நான் இருக்கலாம், ஆனால், என் மகள்கள் அம்மா இல்லாமல் வளர்வது கடினம்.

தற்போது திருமணம் செய்திருக்கும் நித்தி என் மனைவியின் தோழி தான், அவர் என் குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவர்.

அதன் காரணமாகவே அவரை திருமணம் செய்துக்கொண்டேன், தற்போது என் இரண்டு குழந்தைகள் அவருடன் நன்றாக பழகுகிறார்கள்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

மனைவிக்கு போன் செய்யும் மதுரை முத்து..!!

2:12 AM |
என்னைஅறியாமல் என் மனைவி இறந்தது தெரியாமல் அவள் போன்நம்பருக்கு அடிக்கடி கால் பண்ணிவிடுகிறேன்.

இந்த இறப்பு, கனவாக மாறக்கூடாதா? என்று, நான் உறங்கி உறந்கி விழிப்பது. எமாற்றம்??

இல்ல, என் மனைவி என் கனவில் வந்து பேச, அவள் உடை போர்த்தி உறக்கத்தில் சந்திக்க நினைக்கிறேன்.
இது, சின்னப்பிள்ளை தனமாக இருந்தாலும் என் ஆசை.

காரணம், என்னோடு நீண்ட நாட்கள் வாழ அவள் கடைசியாக அன்று இரவு பண்ணிய மாங்கல்ய பூசை, (பாவம் அவள்….)

நான் என்ன சொன்னாலும் விழுந்து விழுந்து சிரிக்கும் அழகிய குழந்தை சிரிப்பு மறுபடியும் எப்போ பார்ப்பது????

மேலும் வாசிக்க…

இதோடு எத்தனை நாள் வாழ்வது, இன்றைக்கு என்ன நாள் தெரியுமா? மதுரை முத்துவின் கண்ணீர் பதிவு

1:44 AM |
மதுரை முத்துவின் மனைவி சமீபத்தில் இறந்தது அவருடைய குடும்பத்தினரை மிகவும் பாதித்தது.

இதை தொடர்ந்து இன்று முத்து தன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவேட்டுள்ளார்.

இதில் ‘இன்று எங்களுடைய திருமண நாள், இன்னும் எத்தனை வருடம் இந்த புகைப்படங்களுடன் வாழ்வது’ என குறிப்பிட்டுள்ளார்.அவரின் வேதனையை கண்டிப்பாக எந்த ஒரு வார்த்தைகளாலும் விளக்க முடியாது,

பலரும் தங்கள் வருத்தங்களை அவருக்கு தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் Thedikoவும் தன் வருத்தத்தை பதிவு செய்கின்றது.
மேலும் வாசிக்க…

'இனி சாமி கும்பிடமாட்டேன்!' - நகைச்சுவை நடிகர் மதுரை முத்து உருக்கம்..!!

2:41 AM |
மக்களை மகிழ்விக்கும் கலைஞர்களின் சொந்த வாழ்க்கை பெரும்பாலும் சோகமாகவே அமைந்து விடுகிறது. நடிகர் விவேக் தன் மகனை இழந்த சோகம் மறைவதற்குள், சமீபத்தில் நடந்த சாலை விபத்தில் நகைச்சுவை நடிகர் 'மதுரை' முத்து தன் மனைவியை இழந்த சோகம் நிகழ்ந்திருக்கிறது.

மனைவி வையம்மாள் தனக்காகவும்,  தங்களின் குழந்தைகளுக்காகவுமே வாழ்ந்தவர் என கண்ணீர் விடுகிறார் 'மதுரை' முத்து.

சோகத்தில் இருந்தவரை ஆற்றுப்படுத்திவிட்டுப் பேசினோம்.

“நானும் மூன்று முறை பெரிய சாலை விபத்துகளில் சிக்கியிருக்கிறேன். மூன்று முறையும் என் மனைவியின் கடவுள் பக்திதான் என்னை காப்பாற்றியது. ஆனால் அந்த பக்தி அவளை காப்பாற்றவில்லை என்பது பெரும் வேதனையை தருகிறது. என் மனைவி விபத்தில் உயிரிழந்த சமயம் நான் ஒரு நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றிருந்தேன். அங்கு எனக்கு 'அம்மை' தாக்கியிருந்தது. வெளியூர் நிகழ்ச்சிகளுக்கு சென்றிருந்தாலும், தினம் தவறாமல் என் மனைவி மற்றும் குழந்தைகளிடம் போனில் பேசிவிடுவேன்.

கடந்த பிப்ரவரி 2-ம் தேதி என் மனைவியிடம் பேசும்போது, எனக்கு அம்மை தாக்கியுள்ளதாக சொன்னபோது துடித்துப்போனாள்.  எனக்கு ஆறுதல் சொன்னதுடன், அன்று இரவிலிருந்து 3-ம் தேதி காலை 5.30 மணிவரை எனக்காக பூஜை செய்துள்ளார். மேலும், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலுக்கு சென்று எனக்காக சிறப்பு பூஜை செய்ய, காரில் சென்றுகொண்டிருந்தபோதுதான் அந்த கொடிய சாலை விபத்து ஏற்பட்டு இறந்துவிட்டாள்.

மதுரையில் நடந்த ஒரு மேடை நிகழ்ச்சியில்தான் அவளை முதன்முறையா சந்திச்சேன். அவரது குணம் பிடித்ததால் நண்பர்களானோம். அதுவே பின்னர் காதலாகி, தம்பதிகளானோம். கல்யாணத்திற்குப் பிறகு எனக்காகவும், எங்கள் குழந்தைகளுக்காகவும் தன்னோட வாழ்க்கையை அர்ப்பணிச்சிக்கிட்டவங்க, என்னோட மனைவி வையம்மாள். அவங்களுக்கு கடவுள் பக்தி அதிகம். காளி பக்தை. எப்போ பார்த்தாலும் சாமி கும்பிட்டுகிட்டே இருப்பாங்க; தினமும் எதாவது ஒரு கோயிலுக்கு போயிடுவாங்க.

முறையா சங்கீதம் கத்துக்கிட்ட என் மனைவி, நல்லா பாடுவாங்க. எனக்காகவே வாழ்ந்த என் மனைவியை ஐந்துமுறை  வெளிநாடுகளுக்கு கூட்டிட்டுப் போனதை தவிர, நான் வேற எதுவும் செய்யவே இல்லை. நான் இன்னும் பெரிய அளவில் சாதித்து, என் மனைவியை காலம் முழுக்க சந்தோஷமாக வெச்சிருக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனா, கடவுள் அதற்கு வழிகொடுக்கலை. இப்போ அவளை இழந்து தவிக்கிறேன்” என்றார் கண்ணீர் விட்டபடி.

நான் வழக்கமா பயன்படுத்தற காரினால் எனக்கு அடிக்கடி முதுகு வலி வரும். இதனால், வர பிப்ரவரி 15-ம் தேதி எங்க திருமண நாளன்று எனக்கு ஆடி சொகுசு கார் ஒன்றினை பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுக்க முடிவு செய்திருந்தாராம் என் மனைவி. அது இப்போதுதான் தெரியவந்தது. ஏழைக் குழந்தைகளுக்கு உதவி செய்வது என் மனைவிக்கு பிடித்தமான விஷயம். அதனால் என் மனைவிக்கு நானும் இன்ப அதிர்ச்சி கொடுக்க எங்க திருமண நாளன்று நிறைய ஏழைக் குழந்தைகளை வீட்டுக்கு வரவழைச்சு சாப்பாடு போடணும்னு நான் நினைச்சிருந்தேன். சின்னத்திரையில் புகழ்பெற்ற காமெடியனான நான், சினிமாவிலும் பெரிய அளவில் வர வேண்டும் என்பதுதான் என் மனைவியின் ஒரே ஆசை.

ஒரு மாசத்துக்கு முன்னாடிதான் மதுரையில கார்டனோட பெரிய வீடு ஒன்றைக் கட்டினோம். என் மனைவிதான் பார்த்து பார்த்து வீட்டைக் கட்டினாங்க. ஆனா, இந்த வீட்டுல சந்தோஷமா வாழ்றதுக்கு என் மனைவிக்கு கொடுத்துவைக்கலை. என் மனைவியும், குழந்தைகளும்தான் என் முதல் ரசிகர்கள். அதனால வீட்டில் தினமும் காமெடி செய்து, அவர்களைத்தான் முதலில் திருப்திப்படுத்துவேன். 'தன்னைச் சுற்றி வெளிச்சம் தரும் மெழுகுவர்த்தியின் அடியில் எப்போதும் இருட்டாகத்தான் இருக்கும்'. தினமும் ஆயிரக்கணக்கான ரசிகர்களை நேரடியாகவும், தொலைக்காட்சிகளின் வாயிலாகவும் மகிழ்விக்கும் என்னைப் போன்ற நகைச்சுவை கலைஞர்களுக்கும் அந்தநிலைதான்.

எந்த நேரமும் கடவுளையே கும்பிட்டுக்கொண்டு இருந்த என் மனைவியை ஒரு கடவுளும் காப்பாத்தலையே என்பதுதான் என் கோபம். அதனால் இனி எந்த கடவுளையும் நான் கும்பிடப்போறதில்லை. எங்க வீட்டுல என் மனைவிக்கு கோயில் கட்டி, என் மனைவியோட சிலையை வெச்சுதான் இனி நான் கும்பிடப்போறேன். அவதான் இனி எனக்கு தெய்வம்” என்கிற மதுரை முத்து சற்று இடைவெளி விட்டு பேசுகிறார்.

“என் இரண்டு பொண்ணுகளுக்கும் இன்னும் என் மனைவி இறந்த விஷயமே முழுசா தெரியாதுங்கறது கொடுமை. 'அம்மா எங்கப்பா... எப்போ வருவாங்க?' னு அவங்க கேட்கிற கேள்விகளுக்கு என்ன சொல்றதுன்னெ தெரியாம அழுதுட்டிருக்கேன். 'அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க'ன்னு சொல்லி சமாளிச்சிக்கிட்டு வர்றேன். குழந்தைகளுக்கு அம்மா இறந்துட்டாங்கன்னு எப்படி புரியவைக்கிறதுன்னே தெரியலை; இன்னும் எத்தனை நாளைக்குதான் அம்மாவோட முகத்தை காட்டாம சமாளிக்கப் போறேன்னும் தெரியலை” என கண்கலங்கியவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை.
மேலும் வாசிக்க…

இறந்த மனைவியை பார்க்க முடியாமல் தவிக்கும் மதுரை முத்து..!!

1:17 AM |
பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்து மனைவி விபத்தில் பலி; அம்மை நோய் காரணமாக அமெரிக்காவிலிருந்து திரும்ப முடியாத நிலையில் மதுரை முத்து

தமிழகத்தின் பிரபல நகைச்சுவையாளர் மதுரை முத்துவின் மனைவி வையம்மாள் வாகன விபத்தொன்றில் கடந்த வாரம் உயிரிழந்துள்ளார். எனினும் தற்போது அமெரிக்காவிலுள்ள மதுரை முத்து, அம்மை நோய் காரணமாக உடனடியாக இந்தியாவுக்குத் திரும்ப முடியாத நிலையில் தவிக்கிறார்.

மதுரை முத்து, மதுரை திருநகர் அருகே உள்ள தனக்கன் குளத்தில் வசித்து வருபவர். பிரபல நகைச்சுவையாளரான இவர், ‘அசத்தப்போவது யாரு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார்.

1200க்கு மேற்பட்ட நிகழ்ச்சிகளை நடத்தியுள்ள மதுரை முத்து, வையம்மாள் (32). தம்பதிகளுக்கு இரு பிள்ளைகள் உள்ளனர். கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் மதுரை முத்து புது வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்தார்.

இந் நிலையில், காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கோயிலுக்கு வையம்மாள் வியாழக்கிழமை காலை காரில் சென்றுள்ளார். காரை பாண்டி என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார்.

திருப்பத்தூர் அருகே கோட்டையூர் நெடுஞ்சாலையில் கார் ஒன்றில் சென்று கொண்டிருந்தபோது, அக் காரின் இடது பக்க டயர் வெடித்துள்ளது. இதில் கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் பயங்கர வேகத்தில் மோதியது.

இதில், வையம்மாள் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சாரதியும் பலத்த காயம் அடைந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

மனைவி இறந்த துயரத்திலுள்ள மதுரை முத்துவுக்கு மற்றொரு நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து ஏற்பட்ட போது மதுரை முத்து கலை நிகழ்ச்சியொன்றுக்காக அமெரிக்காவுக்குச் சென்றிருந்தார்.

மனைவி இறந்த செய்தி அறிந்ததும் தனது நிகழ்ச்சிகளை ரத்துச்செய்துவிட்டு இந்தியாவுக்குத் திரும்புவதற்கு மதுரை முத்து தீர்மானித்தார். ஆனால், அது உடனடியாக சாத்தியமாகவில்லை. அங்கு அவருக்கு அம்மை நோய் ஏற்பட்டுள்ளது.

இதனால் மதுரை முத்து உடனடியாக நாடு திரும்ப முடியாமல் சிக்கலில் உள்ளார். ஏனெனில், அமெரிக்க விதிகளின்படி அம்மை நோயுடன் விமானத்தில் பயணம் செய்ய அனுமதி வழங்க முடியாது என அமெரிக்க விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்து விட்டனர்.

இந் நிலையில், அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் மதுரை முத்துவுக்கு அனுமதி பெற்றுக்கொடுப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அம்மை நோய் குணமான பின்னர் அவர் இந்தியாவுக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மனைவி இறந்த சோகத்தில் இருக்கும் மதுரை முத்து, மனைவியை உடனடியாக பார்க்க முடியாமல் தவிக்கின்றமை அவரின் ரசிகர்களுக்கு மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வாசிக்க…

மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டுமென்பதுதான் நியதியோ???

2:11 AM |
அண்மையில் நடிகர் விவேக்கின் ஒரே மகன் இறந்து போனார். டெங்கு காய்ச்சல் காரணமாக பல நாட்கள் மருத்துசமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் மரணமடைந்தது தமிழக மக்களை மிகுந்த துன்பத்திற்குள்ளாக்கியது.

'சின்னக் கலைவாணர்' என்று தமிழக மக்களால் அன்புடன் அழைக்கப்பட்ட விவேக் தனது ஒரே  மகனை இழந்தது சினிமாத் துறையினருக்கும் அவரது நண்பர்களுக்கும் பலத்த சோகத்தை ஏற்படுத்தியது.

 ஃபேஸ்புக் , ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் கூறி லட்சக்கணக்கான பதிவுகள். எந்த ஆறுதலும் விவேக்கை தேற்ற முடியாது என்றாலும், அவர் மீது தமிழக மக்கள் வைத்திருந்த அன்பை வெளிப்படுத்தும் விதமாகத்தான் இதனை எடுத்துக் கொள்ள வேண்டியது இருந்தது. அந்த சோகத் தடம் கூட இன்னும் மாறியிருக்கவில்லை. சின்னத் திரையை சேர்ந்த மதுரை முத்து தனது மனைவியை விபத்தில் பறிகொடுத்துள்ளார்.

நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அவர் அமெரிக்கா சென்றிருந்த சமயத்தில், பிள்ளையார் பட்டி கோவிலுக்கு சென்று கொண்டிருந்த அவரது மனைவி வையம்மமள் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார். இந்த சம்பவம் மதுரை முத்துவின் உறவினர்கள், நண்பர்கள், அவரது ரசிகர்களுக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு ஆறுதல் சொல்ல வார்த்தைகள் இல்லை. இந்த தம்பதிகளுக்கு இரு பெண் குழந்தைகளும் உண்டு.

தமிழகத்தில் சின்னதிரையை பொறுத்த வரை சன் டி.வியில்  'அசத்த போவது யாரு ' என்ற நிகழ்ச்சி வெகு பிரபலம். இந்த நிகழ்ச்சியில் நடத்தி வந்தது மதுரை முத்துதான். விடாமல் தொடர்ச்சியாக ஜோக்குகளை சொல்லி வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவரே. இப்படியெல்லாம் கூட ஒருவர் நகைச்சுவை நிகழ்ச்சியை நடத்த முடியுமா? என்று கூட சில சமயங்களில் மதுரை முத்துவை பற்றி குறிப்பிடுவது உண்டு. நகைச்சுவையை சொல்வதில் வித்தியாசமாக அவர் கடைபிடித்த பாணிதான் தமிழகம் முழுவதும் பிரபலமாக்கியது.

தொலைகாட்சியில் மட்டுமல்ல,  கிராமம் கிராமமாக  சென்றும் தனது நகைச்சுவை நிகழ்ச்சிகளை நடத்தி வந்தார். எந்த நிகழ்ச்சியில் பங்கேற்றாலும் மதுரை முத்து ,நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் பெரியதாக எந்த வேண்டுகோளும் வைப்பதில்லை. உங்களால் முடிந்ததை கொடுங்கள். எனக்கு அந்த வசதி வேண்டும் இந்த வசதி வேண்டுமென்று கேட்டது கிடையாதாம். சில சமயங்களில் கோவில் நிகழ்ச்சிகளில் நீங்கள்தான் பங்ககேற்க வேண்டும். ஆனால் நீங்கள் கேட்கும் தொகையை எங்களால் கொடுக்க முடியாதே என்று கிராமத்தினார்  சொன்னால் , மறுக்காமல் அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று மக்களை மகிழ்வித்தும் வந்தார்.

மக்களை சிரிக்க வைப்பவர்கள் அழ வேண்டும் என்ற நியதிதியில் இருந்து சார்லி சாப்லினில் மதுரை முத்து வரை யாரும் விதிவிலக்கல்ல  போலும்  . இனிமேல் மதுரை முத்துவை யார் சிரிக்க வைக்கப் போகிறார்கள்? காலம் அவருக்கு ஆறுதலை அளிக்கட்டும்!
மேலும் வாசிக்க…
2015 Thediko.com