நெல்லை ‘பைரவா’ படப்பிடிப்பில் பயங்கர வன்முறை. ஆட்டோ எரிந்து நாசம்..!!

11:02 PM |
இளையதளபதி விஜய் நடித்து வரும் ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் நிலையில் ஒருசில காட்சிகளின் படபிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாக படக்குழுவினர் சமீபத்தில் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை நெல்லை ரயில்வே நிலையம் அருகே ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த படப்பிடிப்பில் நெல்லையில் பந்த் நடப்பது போன்ற காட்சியை இயக்குனர் பரதன் இயக்கினார். இந்த பந்த்தில் வன்முறை நிகழ்வது போலவும், இதன் காரணமாக ஒரு ஆட்டோ தீப்பற்றி எரிவது போன்ற காட்சியையும் அவர் படமாக்கினார்.

இன்னும் ஓரிரண்டு காட்சிகள் மட்டுமே படமாக்கவேண்டியதுள்ளதாகவும், வரும் 10ஆம் தேதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்துவிடும் என்றும் இயக்குனர் பரதன் நெல்லையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும் வாசிக்க…

விஜய் ரசிகர்களுக்கு பைரவா ஸ்பெஷல் என்ன தெரியுமா???

10:57 PM |
விஜய்யின் பைரவா டீஸர் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரசிகர்களிடம் அமோக வரவேற்றை பெற்று வருகிறது. படத்திற்கான வேலைகளும் விரைவில் முடிய இருக்கிறது.

இந்நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் டிசம்பர் 25ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக வெளிவரும் என்று கூறப்படுகிறது.

தீபாவளிக்கு டீஸர், கிறிஸ்துமஸிற்கு பாடல், பொங்கலுக்கு படம் என ஒரே விருந்தாக இருப்பதால் ரசிகர்கள் செம கொண்டாட்ட மகிழ்ச்சி உள்ளனர்.
மேலும் வாசிக்க…

ஒரே இரவில் 2 லட்சம் பார்வையாளர்களை கடந்த ‘பைரவா’ டீசர் - ஒரு பார்வை..!!

1:07 AM |
பரதன் இயக்கத்தில் விஜய் - கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பைரவா. இப்படத்தை விஜயா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், நேற்று இரவு இப்படத்தின் டீசரை வெளியிட்டனர்.

இந்த டீசரில் விஜய் வித்தியாசமான தலைமுடி ஸ்டைலுடன் வந்திருக்கிறார். அவருக்கே உரித்தான மாஸ் காட்சிகளும், சண்டைக் காட்சிகளும் இந்த டீசரில் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது. கீர்த்தி சுரேஷின் அழகான முகபாவனைகள் ரசிக்க வைக்கிறது. சந்தோஷ் நாராயணனின் இசையில் டீசரின் பின்னால் ஒலிக்கும் யார்ரா யார்ரா இவன்...

ஊரைக் கேட்டா தெரியும் பாடலை விஜய் ரசிகர்கள் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் உறுதி.டீசரின் ஆரம்பத்திலேயே விஜய் எதிரியை சுழற்றிவிட்டு அடிக்கும் காட்சி, தோளில் பை ஒன்றை தொங்கப் போட்டுவிட்டு பைக்கில் விஜய் வரும் காட்சி, கத்தியை கையில் வைத்து சுழற்றும் காட்சி, எதிரியிடமிருந்து துப்பாக்கியை பறித்து அவனுக்கே குறி வைப்பது, பாடல் காட்சியில் சிலம்பம் சுற்றுவது என விஜய்க்குண்டான மாஸ் காட்சிகள் எல்லாம் இந்த டீசரில் இடம்பெற்றிருக்கிறது.

அதேபோல், தெரிஞ்ச எதிரியை விட தெரியாத எதிரிக்கு தான் அல்லு அதிகமா இருக்கணும் இன்றைக்கு நிறைய பேர்கிட்ட இல்லாத கெட்ட பழக்கம் ஒன்று என்கிட்ட இருக்கு என்று டீசரில் விஜய் பேசும் வசனங்கள் கண்டிப்பாக தியேட்டரில் ரசிகர்களின் விசில் சத்தத்தை எகிறவிடும். மொத்தத்தில் இந்த டீசர் விஜய்யின் ரசிகர்களுக்கு பெரிய விருந்தாக அமைந்திருக்கிறது என்று சொல்லலாம்.முதலில் இந்த டீசரை நேற்று நள்ளிரவு வெளியிடுவதாகத்தான் முடிவு செய்திருந்தால்கள்.

ஆனால், இரண்டரை மணி நேரத்துக்கு முன்னதாகவே இரவு 9.30 மணிக்கு வெளியிட்டனர். டீசர் வெளியான சில நிமிடங்களுக்குள்ளேயே டீசரை பார்ப்பவர்களின் எண்ணிக்கை விறுவிறுவென ஏறிக்கொண்டே போனது.இந்நிலையில், இன்று காலை 10.30 மணி வரை இந்த டீசரை பார்த்தவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.

இந்த ஆண்டில் விஜய் நடிப்பில் வெளிவந்த தெறி படத்தின் டீசர் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது. தற்போது இந்த ஆண்டிலேயே விஜய்யின் பைரவா படத்தின் டீசரும் பெரிய சாதனைகளை படைக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

Bairavaa - Official Teaser | Ilayathalapathy Vijay, Keerthy Suresh | Bharhathan

10:29 PM |
சமூக வலைத்தளத்தையே அதிர வைத்த பைரவா டீசர்..!!

இளைய தளபதி விஜய் என்றாலே சாதனைகளை முறியடிப்பவர் தானே. நேற்று மாலை அனைவரும் எதிர்ப்பார்த்த பைரவா டீசர் வெளிவந்தது.

டீசர் வெளிவந்த ஒரு சில நிமிடங்களிலேயே பேஸ்புக், டுவிட்டர் என அனைத்தும் ஸ்தம்பித்தது, பைரவா வெளிவந்த ஒரு மணி நேரத்தில் 70 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றது.

தற்போது 1.3 லட்சம் லைக்ஸுகளை தாண்டி கலக்கி வருகின்றது, மேலும் விஜய் ரசிகர்களுக்கு பைரவா டீசர் மிகவும் பிடித்துவிட்டதால் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

மேலும் டீசர் எந்த இடத்திலும் கதையை கணிக்க முடியாத படி உள்ளது, படத்தில் இரண்டு விஜய்யா? என்று ஒரு குழப்பம் நீடிக்கின்றது.

பரதன் என்றாலே வசனம் தான் பேமஸ், அந்த வகையில் ‘நீ வசூல் மன்னனா?’ என்று கேட்க விஜய் ‘அப்படித்தான் ஊருக்குள்ள சொல்றாங்க’ என சொல்லும் இடம் தியேட்டரே அதிரும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

 


மேலும் வாசிக்க…

'பைரவா' டீசர் ரிலீஸ் தேதி-நேரம். அதிகாரபூர்வ அறிவிப்பு..!!

2:07 AM |
இளையதளபதி விஜய், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் பரதன் இயக்கியுள்ள 'பைரவா' படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் டீசர் சென்சார் ஆகிவிட்டது என்பதையும், டீசர் ரிலீஸ் தேதி விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்பதையும் சற்று முன் அறிவித்திருந்தோம்.

இந்நிலையில் சில நொடிகளுக்கு முன் இந்த படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மற்றும் நேரம் அதிகாரபூர்வமாக வெளியாகியுள்ளதோடு இதுகுறித்து புதிய போஸ்டர் ஒன்றும் படக்குழுவினர்களால் வெளியிடப்பட்டுள்ளது.

பைரவா' படத்தின் டீசர் வரும் 28ஆம் தேதி அதிகாலை 12.01க்கு இணையதளத்திலும் மறுநாள் தீபாவளி முதல் வெள்ளித்திரையிலும் வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு கோடானுகோடி விஜய் ரசிகர்களுக்கு கிடைத்த தீபாவளி சிறப்பு விருந்து என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

விஜய்யின் பைரவா படத்தின் பாடல் காட்சிகள் இணையத்தில் வைரல் அதிர்ச்சியில் விஜய்

2:32 AM |
மேலும் வாசிக்க…

Bairavaa HD Official Trailer Vijay ,Keerthy Suresh ,Sathosh Narayanan

1:15 AM |
மேலும் வாசிக்க…

விஜய் சூர்யாவை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் ரொமான்ஸ் பண்ணபோகும் ஹீரோ..!!

12:15 AM |
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் நம்பர் 1 இடத்தை நோக்கி பயணிக்கின்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வந்த ரெமோ வசூல் வேட்டை நடத்திவிட்டது.

தற்போது இவர் விஜய் ஜோடியாக பைரவா படத்தில் நடிக்க, அடுத்து சூர்யாவிற்கு ஜோடியாக தானா சேர்ந்து கூட்டம் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.இந்நிலையில் சண்டக்கோழி-2வில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகின்றது.

இப்படத்தை லிங்குசாமி இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார்.
மேலும் வாசிக்க…

சுவிட்சர்லாந்தில் பைரவா – தளபதியின் கியுட்டான ரகசிய புகைப்படங்கள் உள்ளே

11:17 PM |
பரதன் இயக்கத்தில் விஜய், கீர்த்தி சுரேஷ், சதீஷ் நடித்துவரும் புதிய படம் பைரவா. இதன் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதுவரை இப்படத்தின் 90% காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. மீதமிருக்கும் ஒரு பாடல் காட்சியும் தற்போது சுவிட்சர்லாந்தில் படமாகி வருகிறது.

இதில் விஜய், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படத்தில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெறுகின்றன. இந்த ஐந்து பாடல்களுக்கும் வைரமுத்து வரிகள் எழுதியுள்ளார். சுவிட்சர்லாந்தில் இந்த பாடல் படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இதோ:







மேலும் வாசிக்க…

பட்டைய கிளப்பும் பைரவா ஓப்பனிங் சாங் வரிகள்..!!

12:37 AM |
இளைய தளபதி விஜய் தற்போது பைரவா படத்தின் இறுதிக்கட்ட பணிகளின் பிஸியாகவுள்ளார். இப்படம் வரும் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது.

இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாரயணன், படத்தில் மொத்தம் 5 பாடல்கள், இதில் ஓப்பனிங் சாங் வரி எப்படித்தொடங்கும் என்பதை பரதன் கூறியுள்ளார்.

‘பட்டைய கிளப்பு...பட்டைய கிளப்பு..பட்டித்தொட்டியெல்லாம் பட்டைய கிளப்பு’ என வரிகள் தொடங்கும் என வார இதழ் ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும், தீபாவளிக்கு பைரவா ஸ்பெஷலாக டீசர் அல்லது போஸ்டர்ஸ் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

கீர்த்தி சுரேஷை சங்கடப்படுத்திய பிரபல நடிகர்..!!

2:17 AM |
கீர்த்தி சுரேஷ் தற்போது பைரவா படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். இந்நிலையில் இவர் நடித்த ரெமோ படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது.

இப்படத்தின் நன்றி விழாவில் காமெடி நடிகர் சதீஷும் கலந்துக்கொண்டார், சதீஷ், கீர்த்தி சுரேஷ் கிசுகிசு கதையெல்லாம் அனைவரும் அறிந்ததே.

சதீஷ் மைக்கை பிடித்து எது பேசினாரோ இல்லையோ, கீர்த்தி சுரேஷிற்கும் இடையே நடந்த கிசுகிசு குறித்தே பேசினார்.

இதுக்குறித்து நம் தளத்தில் கூட தெரிவித்து இருந்தோம், ஆனால், கீர்த்திக்கு அவர் பேசும் போது மிகவும் சங்கடமாக இருந்ததாம்.

எப்படி ரியாக்ட் பண்றது என தெரியாத மனநிலையில் தான் அவர் இருந்தாராம்.

மேலும் வாசிக்க…

விஜயின் பைரவா பட காட்சி இணையத்தில் கசிவு! அதிர்ச்சியில் விஜய்..!!

11:58 PM |
மேலும் வாசிக்க…

கீர்த்திசுரேஷ் - சதிஷ் இவர்களுடைய அடுத்த கிசுகிசு..!!

10:29 PM |
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடியன்களில் முன்னணியில் இருப்பவர் சதிஷ். வழக்கமாக கதாநாயகர்களுக்கு தான் கிசுகிசு வரும்.

ஆனால் சதிஷ்க்கு தொடர்ந்து கீர்த்தியுடன் கிசுகிசு வருகிறது.  ரெமோ சக்சஸ் மீட்டில் பேசிய இவர், பைரவா படப்பிடிப்பிலிருந்து தான் நானும், கீர்த்தியும் வந்தோம். கிளம்பும் போதே என்ன கலர் கேட்டேன் புளு கலர் என்று சொன்னார்.

அதனால் தான் நான் கருப்பு சட்டையில் வந்தேன். கடைசியில் அவரும் கருப்பு உடையில் வந்துள்ளார். இதைவைத்து இன்று டிவிட்டரில் கிசுகிசு பரப்பி விட தயாராகி விடுவார்கள் என்றார்.
மேலும் வாசிக்க…

எந்த நடிகரிடமும் இல்லாத ஒன்று...: விஜய் பற்றி கீர்த்தி சுரேஷ்..!!

1:02 AM |
விஜய் ஒரு சிறந்த டான்ஸர். அதனால் பிற நடிகர்களுடன் ஒப்பிடுகையில் அவர் வித்தியாசமானவர் என நடிகை கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.

கேரளாவில் இருந்து கோலிவுட் வந்த வேகத்தில் வளர்ந்துள்ளார் கீர்த்தி சுரேஷ். சிவகார்த்திகேயனுடன் சேர்ந்து ஹிட் கொடுத்த அவர் தற்போது இளைய தளபதி விஜய்யின் பைரவா படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். நடிக்க வந்த உடனேயே விஜய் பட வாய்ப்பு கிடைப்பது எளிது அல்ல.

விஜய் 

கோலிவுட்டின் பெரிய நடிகர்களில் ஒருவரான விஜய்யுடன் நடிக்கிறோமே என்ற பயமே இல்லை. காரணம் அவர் அவ்வளவு சாதாரணமாகவும், எளிமையாகவும் உள்ளார்.

சூப்பர் 

படப்பிடிப்பு தளத்தில் பிறரின் நடிப்பை முதலில் பாராட்டுபவரே விஜய் தான். அவ்வப்போது பாராட்டி சக கலைஞர்களை உற்சாகப்படுத்துகிறார் அவர்.

நடனம் 

விஜய் ஒரு அருமையான டான்ஸர். அந்த திறமை தான் அவர் பிற நடிகர்களிடம் இருந்து வித்தியாசமாகத் தெரிய உதவுகிறது. அவர் பிற நடிகர்களை விட கிரேட்.

தமிழ் படங்கள்

நான் தற்போது பைரவா படத்தில் நடித்து வருகிறேன். இதையடுத்து வேறு எந்த தமிழ் படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை என்று கீர்த்தி சுரேஷ் தெரிவித்துள்ளார்.







மேலும் வாசிக்க…

பிரபல நடிகர் அருகில் அமரவே பயப்படும் கீர்த்தி சுரேஷ்..!!

10:56 PM |
கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவின் வளர்ந்து வரும் நடிகை. விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்துவிட்டார்.

இவர் நடிப்பில் நாளை வரவிருக்கும் படம் ரெமோ, இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய இவர் ‘தனுஷ், சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் போது முதல் சில நாட்கள் பதட்டமாக இருந்தாலும், பிறகு ஜாலியாக சென்றது.

ஆனால், விஜய் சாருடன் பைரவா படத்தில் நடிக்கும் போது இன்றும் அவர் அருகில் உட்காரும் போது ஒரு பயம் இருக்கும்.

அவை மரியாதை கலந்த பயம், ஏனெனில் நான் அவருடைய தீவிர ரசிகை, அதனால் தான்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

சட்டை இல்லாமல் சண்டை போட்ட விஜய் - பைரவா படக்காட்சி ..!!

11:48 PM |
மேலும் வாசிக்க…

இளையதளபதி ரசிகர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ்..!!

11:27 PM |
விஜய் நடிப்பில் பைரவா படம் கடைசிக்கட்ட படப்பிடிப்பில் உள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளிவந்தது.

இதை தொடர்ந்து விரைவில் டீசரும் வரவுள்ளதாக கூறப்படுகின்றது. இந்நிலையில் பைரவா படத்தின் மலையாள போஸ்டர் நாளை வருவதாக கூறியுள்ளனர்.

மேலும், புதிய போஸ்டர்கள் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது. பைரவா படம் கேரளாவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com