பாகுபலி 2' ரிலீஸ் தேதி. அதிகாரபூர்வ அறிவிப்பு.!!

7:03 AM |
இந்தியாவின் மிக பிரமாண்டமான திரைப்படமான 'பாகுபலி' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளில் சூப்பர் ஹிட் ஆனது.

விரைவில் இந்த படம் சீனா மற்றும் ஜப்பான் நாடுகளில் வெளியாகவுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமெளலி தற்போது 'பாகுபலி 2' படத்தின் படப்பிடிப்பில் மும்முரமாக உள்ளார். முதல் பாதியின்போதே இரண்டாம் பாகத்துக்கு தேவையான பல முக்கிய காட்சிகளை எடுத்து முடித்துவிட்ட இயக்குனர், தற்போது மீதியுள்ள படப்பிடிப்பை நடத்தி வருகிறார்.

பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, தமன்னா, ராணா, சத்யராஜ்  மற்றும் பலர் நடித்துள்ள 'பாகுபலி 2' படத்தின் ரிலீஸ் தேதி வரும் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் 14 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொன்றார் என்ற மர்மத்தை தெரிந்து கொள்ள இன்னும் ஒரு வருடம் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் வாசிக்க…

பாகுபலி 2 குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்..!!

2:19 AM |
பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்து மெகா ஹிட் ஆன படம் பாகுபலி.

இப்படம் பல சாதனைகளை செய்து முடிக்க, தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அனைவரும் வெயிட்டிங்.

இந்நிலையில் இப்படம் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் திரைக்கு வருவதாக இருந்தது.

ஆனால், சமீபத்தில் வந்த தகவல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.பாகுபலி-2 படப்பிடிப்பு பாதி முடிந்தாலும், இன்னும் பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக படக்குழு கடுமையாக உழைத்து வருகிறதாம்.

இதனால், படம் 2017ம் ஆண்டு தான் திரைக்கு வர வாய்ப்புள்ளது என கூறப்படுகின்றது.
மேலும் வாசிக்க…

பாகுபலி 2ம் பாகம் எப்படி இருக்கும்?

7:23 AM |
பாகுபலி படத்தை விட பாகுபலி 2 படத்தில் பிரபாஸ் தனது உடல் எடையை இன்னும் அதிகரிக்க இருக்கிறார், என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

பாகுபலி முதல் படத்தின் போது 62 கிலோவாக இருந்த தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்து, 82 கிலோ உடல் எடையுடன் ஆஜானுபாகுவான தோற்றத்தில் நடித்து இருந்தார் பிரபாஸ். தற்போது பாகுபலி 2 படத்திற்காக இன்னும் 18 கிலோ எடையை அதிகரித்து சுமார் 100 கிலோ தோற்றத்துடன் பிரபாஸ் நடிக்க இருக்கிறார் என்று டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பாகுபலி

ராஜமௌலியின் பாகுபலி படத்திற்காக சுமார் 3 ஆண்டுகள் கால்ஷீட் கொடுத்து நடித்து இருந்தார் பிரபாஸ். மேலும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக 1.5 கோடி செலவில் உடற்பயிற்சிக் கருவிகளை வாங்கி தனது வீட்டிலேயே உடற்பயிற்சி செய்து, உடல் எடையை 20கிலோ அதிகரித்து இருந்தார்.

பாகுபலி 2

பாகுபலி முதல் பாகம் மாபெரும் வெற்றி அடைந்ததைத் தொடர்ந்து பாகுபலி 2 ம் பாகத்திற்கு உலகளவில் அதிகமான எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன. எனவே முதல் பாகத்தை விடவும் இந்தப் பாகத்தை மிகவும் பிரமாண்டமாக எடுக்கவிருக்கிறார் ராஜமௌலி.

ஆஜானுபாகுவான

பாகுபலி 2 ம் பாகத்தில் தோள்கள் மற்றும் மார்புப் பகுதியை அதிகரித்து கம்பீரமான தோற்றத்துடன் அமரேந்திர பாகுபலியாய் மாறவிருக்கிறார் பிரபாஸ். இந்தப் படத்தில் 100 கிலோ உடல் எடையுடன் பிரபாஸ் தோன்றவிருக்கிறார். இதற்காக மீண்டும் உடல் எடையை அதிகரிக்கும் முயற்சியில் பிரபாஸ் இறங்கியிருக்கிறார்.

முதல் பாகத்தில்

முதல் பாகத்தில் நடித்த ராணா டகுபதி, அனுஷ்கா ஷெட்டி, தமன்னா மற்றும் சத்யராஜ் ஆகியோர் இந்தப் பாகத்தில் முக்கியமான பாத்திரங்களில் நடிக்கிறார்கள். முதல் பாகத்தை விடவும் அதிகமான பொருட்செலவில் இந்தப் படத்தை உருவாக்கி வருகிறார் இயக்குநர் ராஜமௌலி. பாகுபலி 2 எப்போ வரும்…
மேலும் வாசிக்க…

பாகுபாலியில் எப்படி எல்லாம் கண்கட்டி வித்தை செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள்! வீடியோ!!!

7:58 PM |


பாகுபாலியில் எப்படி எல்லாம் கண்கட்டி வித்தை செய்து இருக்கிறார்கள் என்று பாருங்கள்! வீடியோ!!! 
Baahubali "The Beginning" VFX Breakdown

மேலும் வாசிக்க…

‘பாகுபலி’யை கட்டப்பா கொன்றது ஏன்..? சிபிராஜ் சொன்ன ரகசியம்..!!

6:38 AM |
‘பாகுபலி’ வெளியாகி கிட்டத்தட்ட இன்றோடு 30 நாட்கள் ஆகிவிட்டது. இந்திய சினிமா வரலாற்றில் பெரும் வசூல் சாதனையை இப்படம் படைத்துள்ளது. இதனின் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியாகவுள்ளது. தற்போது இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு பணிகளில் பிஸியாக இருக்கிறார் இயக்குனர் ராஜமௌலி.

இந்நிலையில் ‘பாகுபலி’யின் க்ளைமாக்ஸ் காட்சியில் கதை நாயகன் பாகுபலியை ‘கட்டப்பா’ சத்யராஜ் கொல்வதாக காட்சி இருந்தது. பாகுபலி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கும் கட்டப்பா ஏன் ‘பாகுபலியை கொன்றார்’ என்பது புதிராக இருந்து வருகிறது. அடுத்த பாகம் வரும் வரை காத்திருக்க முடியாத ரசிகர்கள் இதன் ரகசியத்தை தெரிந்து கொள்ள சத்யராஜின் மகன் சிபிராஜிடம் தொடர்ந்து கேட்டு வருகின்றனர்.

இதற்கு பதிலளித்த சிபிராஜ் கூறியதாவது…. ‘இயக்குனர் ராஜமௌலி இந்த படத்தில் பாகுபலி கேரக்டரில் என்னை நடிக்க வைக்கவில்லை. எனவேதான் என் அப்பா அந்த கோபத்தில் பாகுபலியை கொன்று விட்டார்’ என கிண்டலாக பதிலளித்துள்ளார்.

Tags: Baahubali 2 Review , பாகுபலி 2 விமர்சனம் , பாகுபலி பகுதி 2 விமர்சனம் , பாகுபலி பகுதி இரண்டு விமர்சனம், Baahubali Part 2 Movie Story , Baahubali Part 2 Movie Online , Baahubali 2 Movie , Baahubali Part 2 Review , பாகுபலி பகுதி இரண்டின் கதை , பாகுபலி 2 கதை, பாகுபலி 2 ரிலீஸ் தேதி, பாகுபலி ரகசியம், பாகுபலியை கட்டப்பா கொல்ல காரணம்
மேலும் வாசிக்க…
2015 Thediko.com