காதலரை கழட்டிவிட்ட நடிகை..!!

12:33 AM |
நயன நடிகை காதலித்து வருவதாக கூறப்படும் சிவமான இயக்குனர் தற்போது சூர்யாமானவரை வைத்து புதிய படமொன்றை இயக்கவுள்ளார்.

இப்படத்தில் ஜோடியாக நடிக்க தனது காதலியான நயன நடிகையை நடிக்கவைக்கலாம் என முடிவு செய்திருந்தாராம்.

தனது விருப்பத்தை காதலியிடமும் அவர் தெரிவித்தாராம். ஆனால், காதலியோ இவரது படத்தில் நடிக்க முடியாது என கைவிரித்துவிட்டாராம். இதனால், இயக்குனர் ரொம்பவும் அப்செட் ஆகிவிட்டாராம்.

காதலி கழட்டிவிட்ட நிலையில், தற்போது வேறொரு நடிகையை தேடி அலைந்து வருகிறாராம் இயக்குனர்.
மேலும் வாசிக்க…

நடிகரின் நல்ல எண்ணத்தால் சம்பளத்தை குறைத்த நடிகை..!!

11:49 PM |
சிரிப்பு பேய்களை அறிமுகம் செய்து வெற்றி பெற்ற முனி நடிகர், நிறைய சமூக சேவைகளும் செய்து வருகிறாராம். இதுபற்றி கேள்விப்பட்ட நயன நடிகைக்கு முனி நடிகர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டு அவருடைய புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம்.

சிரிப்பு பேய்களை அறிமுகம் செய்து வெற்றி பெற்ற முனி நடிகர், நிறைய சமூக சேவைகளும் செய்து வருகிறாராம். இதுபற்றி கேள்விப்பட்ட நயன நடிகைக்கு முனி நடிகர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டு அவருடைய புதிய படத்தில், அவருக்கு ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்து இருக்கிறாராம்.

அதோடு தனது சம்பளத்தையும் குறைத்துக் கொள்ள முடிவு செய்து இருக்கிறாராம். யாருக்காகவும் சம்பளத்தை குறைக்காத நடிகை, தற்போது நடிகரின் நல்ல எண்ணத்தை பார்த்து குறைத்திருப்பது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளதாம்.
மேலும் வாசிக்க…

வயதான நடிகர்களுடன் நடிக்க புது கண்டிஷன் போடும் நடிகை..!!

12:39 AM |
வயதான நடிகர்களுடன் ஜோடி சேரவேண்டுமானால் தன்னுடைய கண்டிஷன்களுக்கு ஒத்துவந்தால் நடிக்க தயார் என்று முன்னணி நடிகை ஒருவர் தெரிவித்துள்ளார்.

கோலிவுட், டோலிவுட் இரண்டிலும் கோடிகளுக்கு மேல் சம்பளம் வாங்கும் ஒரே நடிகர் யாரென்று பார்த்தால் அவர் நயன நடிகை மட்டும்தான். இவர் தங்களுடைய படங்களில் நடிக்கிறார் என்றால் அவருக்கு கோடிக்கணக்கில் சம்பளத்தை கொட்டிக் கொடுக்க தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

 இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நயன்தாராவும் தனது கல்லாவை நிரப்பிக் கொண்டிருக்கிறார். தற்போது வயதான நடிகர்களுடன் நடிக்கவும் நயன்தாராவுக்கு நிறைய அழைப்புகள் வருகிறதாம். அப்படி வருபவர்களிடம் நயன நடிகை தற்போது புதிய கண்டிஷன்களை போட ஆரம்பித்திருக்கிறாராம்.

அதாவது, வயதான நடிகர்களுடன் நடிக்க வேண்டுமானால் தனக்கு சம்பளமாக ரூ.4 கோடி தரவேண்டும் என்பதுதான் அவருடைய கண்டிஷனாம். தயாரிப்பாளர்களும் இவருக்காக அந்த சம்பளத்தை கொடுக்க முன்வருகிறார்களாம். இதனால், நயன நடிகையின் காட்டில் தற்போது பயங்கரமான பண மழைதான் என்று சொல்லவேண்டும்.

மேலும் வாசிக்க…

கோடிகளில் சம்பளம் குவிவதால் காதலரை கழட்டிவிட்ட நடிகை..!!

1:41 AM |
கோலிவுட்டில் முன்னணி வரிசையில் இடம்பிடித்த நடிகைக்கு வாய்ப்புகள் குவிவதால் கோடி கணக்கில் சம்பளமும் எகிறியுள்ளதார். இதனால், தனது காதல் இயக்குனரை கழட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிவமான இயக்குனரும் நயனமான நடிகையும் காதல் வலையில் சிக்கி, ஜாலியாக ஊர் சுற்றுவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இரண்டு பேர் தரப்பிலும் இதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் இருந்து வந்தனர்.

இடையில், நடிகை மட்டும் நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும், இவர்களை தொடர்ந்து காதல் கிசுகிசுக்கள் தினமும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.


இந்நிலையில், நயன நடிகை காதல் வயப்பட்டதாக கூறப்படும் சிவமான இயக்குனரை தற்போது கழட்டிவிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இருவரையும் தற்போது எங்கும் ஒருசேர பார்க்கமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்ததில், நடிகைக்கு முன்பைவிட தற்போது பட வாய்ப்புகள் அதிக அளவில் வருகிறதாம். அப்படி வரும் படங்கள் எல்லாவற்றிலும் இவருக்கு சம்பளம் கோடிகளில் கொடுக்கிறார்களாம்.

இதனால், தற்போது காதல் வலையில் சிக்கி சின்னாபின்னாவதைவிட தற்போதைக்கு தொழிலில் மட்டும் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்துள்ளாராம். இதன்விளைவே, தற்போது சிவமான இயக்குனரை கழட்டிவிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com