கோலிவுட்டில் முன்னணி வரிசையில் இடம்பிடித்த நடிகைக்கு வாய்ப்புகள் குவிவதால் கோடி கணக்கில் சம்பளமும் எகிறியுள்ளதார். இதனால், தனது காதல் இயக்குனரை கழட்டிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிவமான இயக்குனரும் நயனமான நடிகையும் காதல் வலையில் சிக்கி, ஜாலியாக ஊர் சுற்றுவதாக சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இரண்டு பேர் தரப்பிலும் இதற்கு மறுப்பு ஏதும் சொல்லாமல் இருந்து வந்தனர்.
இடையில், நடிகை மட்டும் நாங்கள் நண்பர்களாகத்தான் இருக்கிறோம் என்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார். இருப்பினும், இவர்களை தொடர்ந்து காதல் கிசுகிசுக்கள் தினமும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.
இந்நிலையில், நயன நடிகை காதல் வயப்பட்டதாக கூறப்படும் சிவமான இயக்குனரை தற்போது கழட்டிவிட்டுள்ளதாக சினிமா வட்டாரங்களில் ஒரு பேச்சு அடிபடுகிறது. இருவரையும் தற்போது எங்கும் ஒருசேர பார்க்கமுடியவில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கு காரணம் என்னவென்று ஆராய்ந்ததில், நடிகைக்கு முன்பைவிட தற்போது பட வாய்ப்புகள் அதிக அளவில் வருகிறதாம். அப்படி வரும் படங்கள் எல்லாவற்றிலும் இவருக்கு சம்பளம் கோடிகளில் கொடுக்கிறார்களாம்.
இதனால், தற்போது காதல் வலையில் சிக்கி சின்னாபின்னாவதைவிட தற்போதைக்கு தொழிலில் மட்டும் கவனம் செலுத்தலாம் என முடிவு செய்துள்ளாராம். இதன்விளைவே, தற்போது சிவமான இயக்குனரை கழட்டிவிட்டதாக கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
காதல் இயக்குனர்
,
சிவமான இயக்குனர்
,
சினிமா
,
நடிகை
,
நயன நடிகை