நையப்புடை படத்தின் டிரைலர் தயாராகி வருகிறது. இந்த டிரைலரில் எஸ்.ஏ.சியின் வற்புறுத்தலின்பேரில் ஒரு சர்ச்சைக்குரிய வசனம் இணைக்கப்பட்டுள்ளதாம்.
'ஒரு தமிழன் தான் நாட்டை ஆள போறான். அவன் வந்துகிட்டே இருக்கான். இனி அடுத்து தமிழன் ஆட்சிதான் என்ற வசனம் வருகிறதாம்.
''நையப்புடை'க்கு பிரச்சனை வந்தாலும் பரவாயில்லை. இந்த வசனத்தால் மேலிடத்தின் கோபப்பார்வைக்கு ஆளாகி தெறி, கபாலி படங்களின் ரிலீஸுக்கு பிரச்சனை வந்துவிடுமோ என பதறிய தாணு,
இந்த படத்தின் இயக்குனரை அழைத்து உடனே அந்த வசனத்தை கட் செய்ய சொன்னாராம்.
விஜய்யை மனதில் வைத்து எழுதப்பட்ட வசனத்தை தாணு கட் செய்ய சொன்னது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
Tags:
Cinema
,
கபாலி
,
சினிமா
,
தாணு
,
தெறி
,
நையப்புடை
,
விஜய்