நடிகையால் விஜய் வாங்கிய திட்டு..!!

10:44 PM |
இளைய தளபதி விஜய் தனக்கென்று மாஸ் ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார். அவரை யாராவது திட்ட முடியுமா? அப்படி திட்டினால் அவருடைய ரசிகர்கள் விடுவார்களா? வெளுத்து வாங்கிவிடுவார்கள்.

அந்த வகையில் விஜய்யின் திரைப்பயணத்தில் ஆரம்ப காலத்தில் அவருடன் பல படங்களில் இணைந்து நடித்தவர் சங்கவி.

இவர் சமீபத்தில் ஒரு பேட்டியில் ‘நான் விஜய் சாருடன் இணைந்து நடித்த போது ஆற்றில் இறங்குவது போல் ஒரு காட்சி.

அதில் நான் வேகமாக இறங்கிவிட்டேன், விஜய் இறங்கவில்லை, அதற்கு அந்த படத்தின் இயக்குனர், “ஏன் உன்னால் இறங்க முடியாதா?” என கோபமாக கேட்டார், அந்த இயக்குனர் வேறு யாரும் இல்லை, விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சி தான்’ என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

என் மகனே என் ட்ரைலரை வெளியிட மறுத்தார், ஏனென்றால்- எஸ்.ஏ.சி ஓபன் டாக்

1:41 AM |
இளைய தளபதி விஜய் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் அவருடைய தந்தை எஸ்.ஏ.சி தான்.

இந்நிலையில் இவர் நடித்த நையப்புடை படத்தின் ட்ரைலரை விஜய் தன் சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட மறுத்துவிட்டாராம்.இதை ஒரு பேட்டியில் எஸ்.ஏ.சி கூறியுள்ளார்.

இதற்கு ஏன் விஜய் அதை வெளியிடவில்லை என விளக்கமும் கூறியுள்ளார்.விஜய் இவரிடம் ‘என் தளத்தில் வெளியிடுவதில் எந்த தயக்கமும் இல்லை, ஆனால், உங்களை எல்லோரும் கிண்டல் செய்வார்கள் அப்பா’ என கூறினாராம்.
மேலும் வாசிக்க…

விஜய் பெயர் குறித்த ரகசியத்தை வெளியிட்ட எஸ்.ஏ.சி..!!

12:05 AM |
“விஜய் என்றாலே வெற்றிதான் என்று அர்த்தம். மேலும் அந்த பெயர் மீது எனக்கு பெரிய கிரேஸ் இருந்தது. அதனால்தான் எனது படங்களில் கூட பலமுறை ஹீரோக்களுக்கு விஜய் என்று பெயர் சூட்டியிருப்பேன்” என ‘இளைய தளபதி’க்கு விஜய் என்று பெயர் வைத்த காரணத்தை சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார் அவரது தந்தை எஸ்.ஏ.சி.

பாடலாசிரியர் பா. விஜய்யுடன் இணைந்து இவர் ஹீரோவாக நடித்துள்ள நையப்புடை திரைப்படம் நாளை வெளியாகவுள்ளது. எஸ்.ஏ.சி கதை, திரைக்கதை, வசனத்தில் அறிமுக இயக்குனர் விஜய் கிரண் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com