தன்னை அறிமுகப்படுத்தியவருக்கு நன்றிக்கடன் செய்யும் அதர்வா..!!

11:23 PM |
பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் அதர்வா. அதன்பின் பரதேசி, ஈட்டி போன்ற பல வெற்றிப்படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் இவரது முதல் படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ், இன்னும் முன்னணி இடத்துக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் அதர்வாவை சந்தித்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அவருக்கேற்ற ஒரு கதையை சொல்லியிருக்கிறார். இந்த கதை மிகவும் பிடித்துவிட்டதால் இதில் நடிக்க சம்மதித்த ஆதர்வா, பல தயாரிப்பாளர்களிடமும் சிபாரிசு செய்துள்ளார். ஆனால் இப்படத்தை தயாரிக்க ஒருவரும் முன்வராததால் தற்போது இவரே இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக
திட்டமிட்டுள்ளார்.
மேலும் வாசிக்க…

ஈட்டி படத்தின் வெற்றி விழாவில் நடிகர் அதர்வா நெகிழ்ச்சி..!!

12:56 AM |
ஈட்டி படத்தின் வெற்றி விழா பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் படத்தின் தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் , நாயகன் அதர்வா முரளி , இயக்குநர் ரவி அரசு , ஒளிப்பதிவாளர் சரவணன் அபிமன்யு , படத்தொகுப்பாளர் ராஜா முகமது மற்றும் படக்குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் நாயகன் அதர்வா முரளி அவர்கள் பேசியது , நான் இந்த படத்துக்காக இரண்டு வருடங்களாக மிகப்பெரிய அளவில் உழைத்துள்ளேன். அந்த உழைப்பு சாதாரணமானது அல்ல.

பல நாட்களாக ஈட்டி படத்தின் வெளியீடு தள்ளி கொண்டே சென்றது. படம் வெளியாக போகிறது என்று எதிர்பார்த்து கொண்டு இருந்த போது திடீர் என்று படம் மழை காரணமாக தள்ளி சென்றது.

அதன் பின்பு மக்கள் மழையின் பிடியில் இருந்து மீண்டால் போதும் என்று நினைத்து கொண்டு இருந்தோம். அப்போது தயாரிப்பாளர் திரு. மைகேல் ராயப்பன் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு படத்தை பதினோராம் தேதி வெளியிட போவதாக கூறினார்.

அது சரியான முடிவு என்பது படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை சுவைத்த பிறகு தான் எனக்கு புரிந்தது. மழையின் பிடியில் இருந்து மீண்ட மக்களுக்கு புத்துணர்ச்சி தரும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு படமாக ஈட்டி அமைந்தது என்பதில் மாற்று கருத்தே இல்லை.

படத்துக்கு எந்த ஒரு நெகடிவ் விமர்சனமும் அளிக்கமால் படத்தை பற்றி சிறப்பாக மட்டும் எழுதிய பத்திரிக்கை மற்றும் மீடியா நண்பர்களுக்கு நன்றி என்றார் நாயகன் அதர்வா முரளி.
மேலும் வாசிக்க…

'ஈட்டி' வெற்றியை அடுத்து சுறுசுறுப்பாகும் அதர்வாவின் அடுத்த படம்..!!

9:59 PM |
அதர்வா, ஸ்ரீதிவ்யா நடிப்பில் நேற்று வெளியான 'ஈட்டி' திரைப்படம் ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் அதர்வாவின் அடுத்த படமான 'கணிதன்' படத்தை விரைவில் முடித்து ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

அதர்வா, மெட்ராஸ்' நாயகி கேத்தரின் தெரசா, கே.பாக்யராஜ், சத்யராஜ், நாசர், மனோபாலா, கருணாகரன், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரா உள்பட பலர் நடித்துள்ள 'கணிதன்' திரைப்படத்தை விரைவில் முடிக்க இயக்குனர் சந்தோஷ் தீவிர முயற்சியில் உள்ளார். கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ள இந்த படத்திற்கு டிரம்ஸ் சிவமணி இசையமைத்துள்ளார்.

இந்த படம் அனேகமாக வரும் 2016ஆம் ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சயின்ஸ் பிக்சன் படம் என்பதால் இந்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் வாசிக்க…

Top Hot


2015 Thediko.com