பாணா காத்தாடி’ படம் மூலம் தமிழ்த் திரையுலகுக்கு அறிமுகமானவர் அதர்வா. அதன்பின் பரதேசி, ஈட்டி போன்ற பல வெற்றிப்படங்களில் இவர் நடித்துள்ளார். ஆனால் இவரது முதல் படத்தை இயக்கிய பத்ரி வெங்கடேஷ், இன்னும் முன்னணி இடத்துக்கு வர முடியாமல் தவித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் அதர்வாவை சந்தித்த இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் அவருக்கேற்ற ஒரு கதையை சொல்லியிருக்கிறார். இந்த கதை மிகவும் பிடித்துவிட்டதால் இதில் நடிக்க சம்மதித்த ஆதர்வா, பல தயாரிப்பாளர்களிடமும் சிபாரிசு செய்துள்ளார். ஆனால் இப்படத்தை தயாரிக்க ஒருவரும் முன்வராததால் தற்போது இவரே இப்படத்தின் மூலம் தயாரிப்பாளராக
திட்டமிட்டுள்ளார்.
Tags:
Cinema
,
அதர்வா
,
ஈட்டி
,
சினிமா
,
நன்றிக்கடன் செய்யும் அதர்வா