ஒரே நாளில் ஆலுமா டோலுமா சாதனையை முறியடித்து ஜித்து ஜில்லாடி..!!

1:50 AM |
அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் வேதாளம். இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் 1 கோடி ஹிட்ஸை தாண்டிவிட்டது.

மேலும் 43 ஆயிரம் லைக்ஸுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று நள்ளிரவு விஜய்யின் தெறி படத்தின் ஜித்து ஜில்லாடி பாடல் வெளிவந்தது.

இப்பாடல் அதற்குள் 44 ஆயிரம் லைக்ஸுகளை பெற்று ஆலுமா டோலுமா சாதனைய முறியடித்து விட்டது.
மேலும் வாசிக்க…

ஒரே நேரத்தில் தல தளபதி படைத்த சாதனை..!!

12:15 AM |
விஜய், அஜித் இருவரும் தங்கள் சாதனைகளை தாங்களே முறியடித்து வருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் தெறி டீசர் அஜித்தின் வேதாளம் படத்தின் டீசர் சாதனையை முறியடித்தது.இந்த டீசர் தற்போது வரை 67 லட்சத்திற்கு மேல் பார்த்துள்ளனர். இந்நிலையில் சத்தமில்லாமல் அஜித் படத்தின் பாடல் ஒன்றும் ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளது.

வேதாளம் படத்தில் இடம்பெற்ற
ஆலுமா
டோலுமா
பாடல் 92 லட்சம் ஹிட்ஸை தாண்டியுள்ளது. வாழ்த்துக்கள் தலதளபதி.
மேலும் வாசிக்க…

ஆலுமா டோலுமா அடிச்சிட்டாங்கலே காப்பிமா???

2:40 AM |
வேதாளம் படத்தில் வரும் இந்த பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஆனால் இந்தப் பாடலை கவுண்டமணி அவர்களின் காமெடியில் வரும் பாட்டு மெட்டுடன் அப்படியே ஒத்துப் போகின்றது.

என்ன அனிருத் அங்க அடிச்சு இங்க அடிச்சு இப்ப பழைய தலைக்கிட்டயே மெட்டு எடுத்து புது தலைக்கு அடிச்சிட்டீங்களா?

அஜீத் ரசிகர்களே இது கலாய்ப்பு அல்ல அனிருத் காப்பி அடிச்சாரா இல்லையா என்பதுதான் இதற்காகவெல்லாம் சண்டைக்கு வரப்படாது சரியா!

 

Aaluma Doluma song is copied from goundamani?



மேலும் வாசிக்க…

முதல் 2 இடங்களை கைப்பற்றிய வேதாளம், நானும் ரௌடிதான்..!!

4:08 AM |
 அடுத்தடுத்து வெளியான தனது இரண்டு ஆல்பங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்த உற்சாகத்திலிருக்கிறார் இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன்.

 தனுஷ் தயாரிப்பில், விஜய்சேதுபதி - நயன்தாரா இணைந்து நடித்திருக்கும் ‘நானும் ரௌடிதான்’ படத்தின் பாடல்கள் இரண்டு வாரத்திற்கு முன்பு ‘சிங்கிள் ட்ராக்’காக ஒவ்வொரு பாடலாக வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அஜித்துடன் முதல்முறையாக அனிருத் இணைந்திருக்கும் ‘வேதாளம்’ படத்தின் பாடல்கள் கடந்த வாரம் ரிலீஸ் செய்யப்பட்டன.

யூத்களுக்கு மிகவும் பிடித்த ஆல்பமாக ‘நானும் ரௌடிதான்’ பாடல்களும், தல ரசிகர்களை ஆட்டம் போட வைத்திருக்கும் ஆல்பமாக ‘வேதாளம்’ படத்தின் பாடல்களும் தற்போது பெரும்பாலான எஃப்.எம்.களிலும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.அதேபோல் ஐ ட்யூன்ஸில் தரவிறக்கம் செய்யப்படும் ‘டாப் 10’ தமிழ் ஆல்பங்களில் அஜித்தின் வேதாளம் முதலிடத்திலும், விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடிதான்’ இரண்டாவது இடத்தையும் பிடித்திருக்கிறது.

 தனித்தனி பாடல்களைப் பொறுத்தவரை வேதாளம் படத்தின் ‘ஆலுமா டோலுமா...’ முதலிடத்திலும், நானும் ரௌடிதான் படத்தின் ‘நீயும் நானும்...’ பாடல் 2வது இடத்திலும் உள்ளது. டாப் 10 பாடல்கள் பட்டியலில் அனிருத்தின் இசையமைப்பில் உருவாகியிருக்கும் வேதாளம், நானும் ரௌடிதான் படப் பாடல்களே 9 இடங்களை கைப்பற்றியிருக்கின்றன.இந்திய அளவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் உருவாகியிருக்கும் ‘தமாஷா’ ஆல்பம் முதலிடத்திலும், வேதாளம், நானும் ரௌடிதான் 2வது மற்றும் 3வது இடங்களிலும் இடம்பிடித்திருக்கின்றன.

மேலும் வாசிக்க…
2015 Thediko.com