ரஜினியின் திடீர் உடல் நலக்குறைவிற்கு காரணம்..!!

2:02 AM |
கபாலி படத்திற்கு பிறகு ரஜினி நடித்து வந்த படம் 2.0 இப்படத்தின் வேலைகளை முடித்து கொடுத்து விட்டு உடல் நிலை சரியில்லாமல் ரஜினி அமெரிக்காவில் ஓய்வெடுத்து வருகிறார். இதற்கு காரணம் அவர் 2.0 படத்தில் அணிந்த 40 கிலோ எடை உள்ள ஆடை தான்.

மேலும் அந்த ஆடையில் வெயில்காலத்தில் அவுட்டோரில் வைக்கப்பட்ட படப்பிடிப்பில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் கடுமையான குளிர் காலத்தில் ஏசி ப்ளோரில் படப்பிடிப்பை வைத்திருந்ததாலும் தான் ரஜினியின் உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் வாசிக்க…

விக்ரம் மகளுக்கும் கலைஞர் பேரனுக்கும் எப்படி நிச்சயம் ஆனது தெரியுமா??

10:47 PM |
விக்ரமின் மகள் அக்‌ஷிதாவிற்கு அடுத்த மாதம் கலைஞர் பேரன் மனு ரஞ்சித்துடன் நிச்சயத்தார்த்தம் ஆகவுள்ளது. இவர்கள் திருமணம் எப்படி நிச்சயக்கப்பட்டது தெரியுமா? இதை சமீபத்தில் மு.க.முத்துவின் துணைவியார் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இதில் இவருடைய பேத்தியும், விக்ரமின் மகளும் அமெரிக்காவில் ஒன்றாக படித்தவர்களாம், அவர்கள் சென்னை வந்த போது தன் பேத்தியை பார்க்க அக்‌ஷிதா அடிக்கடி வருவாராம்.

அப்போது தான் மனு ரஞ்சித்திடம் பழகியுள்ளார், இருவரும் நட்பாக தான் பழகினார்களாம், ஆனால், விக்ரம் குடும்பத்திற்கு மனு ரஞ்சித்தை பிடிக்க, பின் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண முடிவு செய்துள்ளார்கள் என கூறியுள்ளார்.
மேலும் வாசிக்க…

ரகசிய கேமரா பயம்..சொந்த வீடு தேடும் ப்ரியங்கா! அமெரிக்காவில்..!!

11:35 PM |
ஹோட்டல்களில் தங்கும்போது ரகசிய கேமரா ஆபத்து நிறைய இருப்பதால், அமெரிக்காவில் சொந்த வீடு தேடுகிறேன் என்கிறார் நடிகை ப்ரியங்கா சோப்ரா.

இப்போதெல்லாம் வாட்ஸ் ஆப் உள்ளிட்ட சமூக வலைத் தளப் பக்கங்கள் மற்றும் குழுக்களில் அதிகம் உலா வருவது நடிகைகளின் அந்தரங்க படங்கள் மற்றும் ஆபாச வீடியோக்கள்தான். பெரும்பாலும் ஹோட்டல்களில் குளியல் அறைகளில் அவர்கள் குளிப்பதை ரகசிய கேமிராக்கள் மூலம் படம் பிடித்து இணையத்தில் ஏற்றி விடுகிறார்கள்.

படுக்கை அறையில் இருக்கும் படங்கள், ஆண் நண்பருடன் நெருக்கமாக இருப்பது போன்ற படங்களும் தப்புவதில்லை.இதற்காக போலீசில் புகார் செய்யப் பயந்து, அந்தப் படத்திலிருப்பது நானல்ல என்று கூறிவிட்டு அடுத்த வேலையைப் பார்க்கப் போய் விடுகிறார்கள் நடிகைகள்.

"நான் ஹோட்டல்களில் தங்க பயப்படுவதே இந்தப் பிரச்சினைக்காகத்தான்" என்கிறார் பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ரா.

இப்போது அவர் அடிக்கடி அமெரிக்கா போய் வருகிறார். டிவி ஷோ, ஹாலிவுட் படங்களில் நடிப்பது போன்ற காரணங்களுக்காக அங்கேயே ஹோட்டல்களில் தங்குகிறார். இந்தியாவைப் போல அமெரிக்க ஹோட்டல்கள் பாதுகாப்பற்றவை அல்ல. தனிமனித சுதந்திரத்தில் மிகுந்த அக்கறை கொண்ட நாடு அது. ஆனாலும் ப்ரியங்காவுக்கு இன்னும் நம்பிக்கை வரவில்லையாம்.

அவர் கூறுகையில், "நட்சத்திர ஓட்டல்களில் தங்குவதை நான் அசவுகரியமாக நினைக்கிறேன். ரகசிய கேமராக்கள் பொருத்தி வைத்து இருக்கலாம் என்று சந்தேகிக்கிறேன். இதனால் ஓட்டல்களில் நான் தங்குவது இல்லை. வெளிநாடுகளுக்கு போகும்போதும் ஓட்டல்களில் தங்குவதை தவிர்க்கிறேன். தற்போது டெலிவிஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் ஹாலிவுட் படத்தில் நடிப்பதற்காகவும் அடிக்கடி அமெரிக்கா செல்ல வேண்டி இருக்கிறது. அங்கு ரகசிய கேமரா பயத்தினால் ஓட்டல்களில் தங்குவது இல்லை. இதனால் அமெரிக்காவில் சொந்தமாக வீடு வாங்க முடிவு செய்துள்ளேன். இதற்காக நல்ல வீடு தேடி வருகிறேன்,'' என்றார்.
மேலும் வாசிக்க…

அமெரிக்காவில் 139 தியேட்டர்களில் வெளியாகும் தெறி..!!

10:04 AM |
அட்லி இயக்கத்தில் ‘இளையதளபதி’ விஜய் நடித்திருக்கும் தெறி படத்தின் அமெரிக்க உரிமையை பிரபல சினி கேலக்ஸி நிறுவனம் ரூ. 3 கோடி கொடுத்து கைப்பற்றியுள்ளது.

இன்றைய நிலவரப்படி அமெரிக்காவில் இப்படத்தை 139 தியேட்டர்களில் வெளியிட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. படம் வெளிவரும் சமயத்தில் இதன் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஏப்ரல் 14-ம் தேதி வெளியாகும் இப்படத்துக்கான முன்பதிவு அமெரிக்காவில் வரும் ஏப்ரல் 8-ம் தேதியே தொடங்குகிறது.
மேலும் வாசிக்க…

தெறி ஸ்டண்ட் மாஸ்டர் படத்தில் இணைந்த அமெரிக்க பிரபலம்..!!

12:53 AM |
பிரபல ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் சங்குச்சக்கரம். இதில் அமெரிக்காவைச் சேர்ந்த Jeremy Roske என்ற பிரபல மார்ஷியல் ஆர்ட்ஸ் கலைஞர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இசையுடன் கலந்த பிரேசிலியன் மார்ஷியல் கலையான கெபோயிராவில் இவர் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் தற்போது சென்னையில் செட் அமைத்து படமாக்கப்பட்டு வருகிறது. திலீப் இந்த சண்டைக் காட்சிகளுக்கு பயிற்சியளித்து வருகிறார்.
மேலும் வாசிக்க…

உடல் எடையை குறைக்க அனுஷ்காவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை..!!

3:20 AM |
நடிகை அனுஷ்கா ‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் குண்டு பெண்ணாகவும், மெலிந்த தோற்றத்துடனும் நடிகர் ஆர்யாவுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். குண்டு பெண்ணாக தோன்றுவதற்காக அனுஷ்கா தனது உடல் எடையை 20 கிலோ அதிகரித்தார்.

‘இஞ்சி இடுப்பழகி’ படத்தில் அனுஷ்கா சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் பாகுபலி–2 படத்தில் நடிக்க உள்ளார். அதற்கு முன் அனுஷ்கா உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய தோற்றத்துக்கு வருகிறார்.

உடல் எடையை குறைக்க தெரபி சிகிச்சை மேற்கொள்ள முடிவு செய்துள்ளார். இதற்காக அவர் அமெரிக்கா செல்கிறார். இந்த மாத தொடக்கத்திலேயே அனுஷ்கா அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்தார்.

ஆனால் ‘ருத்ரமாதேவி’ படத்தின் முன்னோட்ட விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வேண்டி இருந்ததால் அனுஷ்காவின் அமெரிக்க பயணத்தில் தாமதம் ஏற்பட்டது.

நாளை ‘ருத்ரமாதேவி’ படம் ரிலீஸ் ஆகிறது. அதன் பிறகு அனுஷ்கா அமெரிக்கா சென்று தெரபி சிகிச்சை எடுத்துக் கொள்வார் என்று அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர்.
மேலும் வாசிக்க…
2015 Thediko.com