தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ரம்பா. இவர் கடந்த 2010ல் கனடாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் இந்திரகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
திருமணத்துக்கு பின் நடிப்புத்தொழிலை விட்டு விட்டு, குடும்பத்தலைவியாக இருந்து வந்தார்.
இந்நிலையில், நேற்று விவாகரத்து கோரி, சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் நடிகை ரம்பா மனு தாக்கல் செய்தாக தகவல் பரவியது. அதன் பின்னர் அவர் தன் கணவருடன் சேர்த்து வைக்க கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.
ஆனால் இதற்கு நடிகை ரம்பாவே ஆங்கில நாளிதழ் ஒன்றிற்கு என் திருமண வாழ்க்கை குறித்து வெளியான தகவல்கள் அனைத்தும் வதந்தி என கூறியிருந்தார்.
எனினும் அவர் தற்போது கணவரிடம் பிரிந்து வாழ்வதாலும், படங்களில் நடிப்பதாலும் 2 மகள்களை வளர்க்க குடும்பச்செலவுக்கு சிரமப்படுவதாகவும் அதனால் நீதிமன்றத்தில் இந்துமத திருமணச் சட்டப்படி, தனது கணவனிடம் இருந்து, மாதந்தோறும் ரூ.2.50 லட்சம் நிதியுதவி வாங்கித் தரும்படி கோரி, மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
இந்திரகுமார்
,
சினிமா
,
தகவல்
,
மனுத்தாக்கல்
,
ரம்பா
,
விவாகரத்து