எனக்கு குடிப்பழக்கத்தை கற்றுக் கொடுத்ததே எனது முன்னாள் கணவர் மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தார் தான் என நடிகை ஊர்வசி தெரிவித்துள்ளார்.
ஊர்வசி தனது கணவரும், நடிகருமான மனோஜ் கே ஜெயனை பிரிந்த பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்து ஒரு ஆண் குழந்தைக்கு தாயானார். ஊர்வசிக்கு குடிப்பழக்கம் உள்ளது என்று விவாகரத்தின்போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து ஊர்வசி மலையாள பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது,
குடி
மனோஜ் கே ஜெயன் மற்றும் அவரது குடும்பத்தார் கூட்டாக அமர்ந்து மது அருந்துவார்கள். அவர்களால் தான் எனக்கும் மது அருந்தும் பழக்கம் ஏற்பட்டது.
மகள்
என்னை போன்று என் மகளையும் நடிகையாக விட மாட்டேன். அவர் நன்றாக படித்து வாழ்வில் முன்னேற வேண்டும். (மனோஜ் மற்றும் ஊர்வசிக்கு ஒரு மகள் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது)
நடிகை
நான் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது நடிகையானேன். நான் விரும்பி நடிக்க வரவில்லை. ஆனால் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறேன் என ஊர்வசி தெரிவித்துள்ளார்.
படங்கள்
ஊர்வசி மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 400க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். படங்கள் தவிர அவர் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
Tags:
Cinema
,
ஊர்வசி
,
குடிப்பழக்கம்
,
மகள்
,
மது
,
மனோஜ் கே ஜெயன்