சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் இயக்குனரும் நடிகையுமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன். இவர் குடும்பங்களில் இருக்கும் பிரச்சனைகள்இ காதல் பிரச்சனைகள், கள்ளக்காதல் பிரச்சனைகள் என பல பிரச்சனைகளை இந்த நிகழ்ச்சி மூலம் பஞ்சாயத்து செய்து வைக்கிறார்.
இவர் இயக்கிய அம்மணி என்ற ஒரு திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. இந்த படத்தில் ஒரு ஐட்டம் டான்ஸ் இருப்பதாகவும்இ அது அவருக்கு திருப்தியாக உள்ளதாகவும் கூறியுள்ளார்.
என்ன லக்ஷ்மி ராமகிருஷ்ணனா இப்படினு நினைக்காதிங்க அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா?அம்மணி படம் குறித்து அவர் பேசும் போது ஐட்டம் டான்ஸுக்கு பெண்களை பயன்படுத்தறது நல்லவா இருக்கு? என் படத்திலேயும் ஒரு ஐட்டம் சாங் இருக்கு. ஆனா ஆடுறது பொண்ணு இல்லை ஆண் என்றார்.
நம்ம ரோபோ சங்கர் தான் அந்த ஐட்டம் டான்ஸ் ஆட இருப்பதாக கூறிய அவர்இ ஒரு ஆணை ஐட்டம் டான்ஸ் ஆட வச்சுருக்கேன்னு நினைக்கும்போது கொஞ்சம் திருப்தியா கூட இருக்கு என்றார்.
Tags:
Cinema
,
ஐட்டம் டான்ஸ்
,
சினிமா
,
சொல்வதெல்லாம் உண்மை
,
லக்ஷ்மி ராமகிருஷ்ணன்