சினிமா மற்றும் டெலிவிஷன் தொடர்களில் நடித்து பிரபலமானவர் பப்லு. ‘வாரணம் ஆயிரம்’, ‘பயணம்’, ‘பாண்டிய நாட்டு தங்கம்’, ‘சிகரம்’, ‘அழகன்’ உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து உள்ளார். தற்போது ‘வாணி ராணி’ என்ற டெலிவிஷன் தொடரில் நடித்து வருகிறார்.
பப்லு உடல் நிலை பற்றி நேற்று இணையதளங்களிலும், ‘வாட்ஸ்-அப்’பிலும் வதந்தி பரவியது. அதோடு அவர் பேசிய ஆடியோ ஒன்றும் வெளிவந்தது. அதில் ‘என் சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் பிறந்த பாவம். அழும்போது சுற்றி இருந்தவர்கள் சிரித்தார்கள். நான் சிரித்துக்கொண்டே சாகிறேன். சுற்றி இருப்பவர்கள் அழட்டும். என் சாவு இந்த உலகத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக இருக்கட்டும். நான் வாழும்போது என்னுடைய அருமை தெரியல. நான் செத்ததுக்கு அப்புறம் தெரியட்டும்.’ என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் பட உலகில் பரபரப்பு ஏற்பட்டது. அவரை செல்போனிலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. போலீஸ் தரப்பிலும் இந்த ஆடியோ உண்மைதானா? என்று விசாரணை நடத்தப்பட்டது. பின்னர் ஆடியோவில் இடம்பெற்றது ஒரு குறும் படத்தில் அவர் பேசிய வசனம் என்று தெரிய வந்தது. பப்லு நலமாக இருக்கிறார் என்று கூறப்பட்டது.
Tags:
Cinema
,
அழகன்
,
சிகரம்
,
சினிமா
,
பப்லு
,
வாட்ஸ்-அப்