சமீபத்தில் வெளியான பிச்சைக்காரன் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்புகள் கிடைத்து வருகின்றன. தாய்ப் பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை இயக்கியுள்ளார் சசி. விஜய் ஆண்டனி, நடித்திருக்கும் இப்படம் குறித்து எவ்வளவோ விமர்சனங்கள் முக நூலிலும், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களிலும் ரசிகர்கள் கொடுத்து வருகிறார்கள்.
ஆனால், ஒரு ரசிகன் செய்த விமர்சனம் இயக்குநர் சசியை உருக வைத்திருக்கிறது. பிச்சைக்காரன் படத்தைப் பார்த்துவிட்டு விமர்சனம் கொடுத்துள்ளார்,பேப்பர் போடுகிறவர். இயக்குநர் சசி வீட்டுக்குப் பேப்பர் போடும் அவர், படத்தைப் பார்த்துவிட்டு தனது கருத்தையும் பாராட்டுகளையும் பேப்பரிலேயே எழுதிப் போட்டுள்ளார்.
அன்றைய நாளில் வந்த நாளிதழில் “ தங்களது படம் இனிமையாக இருந்தது. அம்மாவிற்கு ஈடு இணை எதுவும் கிடையாது நன்றி இப்படிக்கு அமல்ராஜ்” என அந்த நாளிதழில் கைப்பட எழுதியுள்ளார். இந்த நாளிதழ் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:
Cinema
,
அம்மா
,
சினிமா
,
தாய்ப் பாசம்
,
பிச்சைக்காரன்
,
விஜய் ஆண்டனி