ஆபாச போட்டோ விவகாரத்தில் தொடர்ந்து மலையாள நடிகைகள் குறிவைத்து தாக்கப்படுவது மலையாள திரை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வருடத்தில் ஆஷா சரத் தொடங்கி, அடுத்து ஜோதி கிருஷ்ணா, சில நாட்களுக்கு முன்னர் ஸ்ரீயா ரமேஷ் என சில நடிகைகள் இந்த மார்பிங் செய்யப்பட்ட ஆபாச போட்டோ விவாகரத்தில் பிரச்னையை சந்தித்தனர்..
இப்போது லேட்டஸ்டாக மலையாள நடிகை அஞ்சலி அனீஷ் உபாசனா, இந்த ஆபாச போட்டோ பரப்பும் விஷமிகளுக்கு இலக்காகியுள்ளார்.
சமீபத்தில் வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் மூலம் இவரது போலியான ஆபாச போட்டோ பரவியதை கண்டு அதிர்ச்சியடைந்த அஞ்சலி, இதுகுறித்து போலீசில் புகார் அளித்தார்..
தீவிர விசாரணை நடத்திய போலீஸார், இது தொடர்பாக ஒரு நபரை கைது செய்துள்ளனர்.. மேலும் சிலரை சந்தேக கண்ணோட்டத்தில் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளனர். இதுகுறித்து கூறியுள்ள அஞ்சலி போலீஸார் தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், இதுபோன்ற போட்டோக்களை ஷேர் செய்வதில் யாரும் துணைபோக வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags:
Cinema
,
அஞ்சலி
,
ஆபாச போட்டோ
,
ஆஷா சரத்
,
சினிமா
,
நடிகைகள்
,
ஜோதி கிருஷ்ணா