கபாலி படத்தில் ரஜினிக்கான படப்பிடிப்பு காட்சிகள் முழுமையாக முடிந்துவிட்ட நிலையில், படப்பிடிப்பின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் கபாலி படத்தை எந்தெந்த மொழிகளில் டப் செய்யலாம் என்று படக்குழு திட்டமிட்டுவருகிறதாம்.
இப்படத்திற்கான படப்பிடிப்பு மலேசியா, கோவா மற்றும் சென்னை பகுதிகளில் நடந்தது. மலேசியாவில் ரஜினியின் படப்பிடிப்பு காட்சி நேரங்களில் மலேசியா மக்களின் ஆதரவும், ரசிகர்கள் கபாலி படத்தைக் கொண்டாடியதையும் மனதில் கொண்டு இப்படத்தை மலாய் மொழியில் டப் செய்யத் திட்டமிட்டுவருவதாகச் சொல்லப்படுகிறது.
அவ்வாறு மலாய் மொழியில் டப் செய்யப்பட்டால், தமிழிலிருந்து மலாய் மொழிக்கு டப் செய்யப்படும் முதல் படம் கபாலி தான். ரஞ்சித் இயக்கிவரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தே நடிக்கிறார். தன்ஷிகா, கலையரசன், தினேஷ் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர். மே மாதம் கபாலி படம் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Tags:
Cinema
,
கபாலி
,
கோவா
,
சினிமா
,
தன்ஷிகா
,
மலேசியா
,
ரஜினி
,
ராதிகா ஆப்தே