சமீபகாலமாக எந்த படங்கள் திரைக்கு வந்தாலும் அடுத்தநாள் அந்த படங்களின் திருட்டு விசிடிக்கள் மார்க்கெட்டுக்கு வந்து விடுகிறது. இதனால் பல படங்களின் வசூல் பாதிக்கப்பட்டு வருகிறது.
இதனால் பார்த்திபன், விஷால் உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களது படங்கள் ரிலீசாகும் நேரத்தில் திருட்டு விசிடி விற்பனை செய்யப்படுவதாக கூறப்படும் ஏரியாக்களுக்கு திடீர் விசிட் அடித்து அவர்களை காவல்துறை வசம் ஒப்படைத்து வருகிறார்கள்.
இவர்களில் விஷால், தான் அவுட்டோர்களில் படப்பிடிப்புக்கு செல்லும்போது தனது படம் மட்டுமின்றி மற்ற நடிகர்கள் நடித்த படங்களின் திருட்டு விசிடிக்கள் மற்றும் புதிய படங்கள் லோக்கல் சேனல்களில் ஒளிபரப்பாவதைக்கண்டால் உடனடியாக போலீசில் புகார் செய்து சம்பந்தப்பட்டவர்களை பிடித்துக்கொடுத்தும் வருகிறார்.
அதனால் இப்போது விஷால் வெளியூர்களில் முகாமிட்டிருக்கிற சேதியறிந்தால் அந்த ஏரியாக்களில் புதிய படங்களை யாருமே ஒளிபரப்பு செய்வதில்லையாம்.
Tags:
Cinema
,
சினிமா
,
திருட்டு விசிடி
,
பார்த்திபன்
,
விஷால்