தெறி பட விநியோக உரிமையை லைகா நிறுவனம் வாங்கிவிட்டதாக, ஐங்கரன் நிறுவனத்தின் ட்விட்டர் தளத்தில் சற்று முன்பு கூறியிருந்தனர். இதன் மூலம் கத்தி பட வெற்றி கூட்டணி மீண்டும் இணைவதால் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்தனர்.
ஆனால் சற்று நேரத்திற்கு பிறகு அந்த ட்விட்டை அழித்துவிட்டனர். இந்த தகவலுக்காக வருந்துகிறோம், இது பற்றி அதிகாரபூர்வ தகவலுக்கு காத்திருங்கள் என தெரிவித்திருந்தனர். இதனால் கோலிவுட்டில் பெரிய குழப்பம் நீடிக்கிறது.
ஏப்ரல் மாதம் வரவுள்ள தமிழ் புத்தாண்டு அன்று படம் வெளியாகவுள்ள நிலையில், இயக்குனர் அட்லி இப்போது படத்தின் டப்பிங் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டுள்ளார்.
Tags:
Cinema
,
Vijay
,
கத்தி
,
சினிமா
,
தெறி
,
லைகா