நடிகர் சிம்பு அடுத்ததாக ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் புதிய படத்தில் நடிக்கப்போவது நாம் அனைவரும் அறிந்ததுதான். இப்படத்தில் சிம்புவுக்கு மூன்று ஜோடி மற்றும் மூன்று ரோல்கள் என்பதும் கூட நமக்கு தெரிந்த தகவல்தான்.
இந்நிலையில் இந்த மூன்று ரோல்களையும் வித்தியாசமாக காட்ட ஹாலிவுட் மேக்கப் கலைஞர் சீன் பூட் இதில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் சமீபத்தில் நடிகர் சிம்புவுக்கு ஸ்பெஷல் மேக்கப் டெஸ்ட் ஒன்றை நடத்தியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Tags:
Cinema
,
சிம்பு
,
சினிமா
,
சீன் பூட்
,
த்ரிஷா இல்லனா நயன்தாரா
,
ரவிச்சந்திரன்