தெலுங்கு திரை உலகின் முன்னணி இயக்குனரான திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நிதினுக்கு ஜோடியாக அ.ஆ என்ற படத்தில் சமந்தா நடித்து வருகின்றார்.
இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. அண்மையில் நிதின் சமந்தா பங்கேற்ற நெருக்கமான காதல் காட்சிகள் படமாக்கப்பட்டன. இந்நிலையில் ஸ்டார் ஹோட்டலில் உள்ள குளியலறையில் நிதினுடனான ரொமான்ஸ் காட்சிக்கு சமந்தா மறுப்பு தெரிவித்து விட்டாராம்.
இக்காட்சியை படப்பிடிப்பு தளத்தில் குளியலறை செட்டுப் போட்டு எடுக்கலாம் என திரிவிக்ரம் யோசனை கூறவே அதற்கு சமந்தா சம்மதம் தெரிவித்துள்ளாராம். பின்னர் செட்டில் இக்காட்சி படமாக்கப்பட்டதாக படப்பிடிப்பு தள தகவல்கள் தெரிவிக்கின்றன.
இக்காட்சியே இப்படத்தின் உச்சக்கட்ட காதல் காட்சியாக இருக்கும் என்றும் படக்குழுவினர் கூறுகின்றனர். முக்கோண காதல் கதையான இப்படத்தில் பிரேமம் படத்தின் நாயகி அனுபமா பரமேஸ்வரன் மற்றொரு நாயகியாக நடிக்கின்றார். ஏப்ரல் 22ல் இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Cinema
,
சமந்தா
,
சினிமா
,
நிதின்
,
ஸ்ரீநிவாஸ்