யுத்தம் செய், பாஸ் (எ) பாஸ்கரன், சென்னையில் ஒரு நாள் ஆகிய படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் சின்னத்திரையில் ஒரு ஷோவை நடத்தி வந்தது அனைவரும் அறிந்ததே.
இதில் இவர் பயன்படுத்திய ‘என்னம்மா நீங்க இப்படி பண்றீங்களேமா’ வசனம் மிகவும் பிரபலம். இதை சிவகார்த்திகேயன் தன் படத்தில் பயன்படுத்தினார் என அவரை கோபமுடன் டுவிட்டரில் தாக்கினார்.
ஆனால், இதே வசனத்தை ஒரு அரசியல் கட்சி நேற்று தமிழ்நாடு முழுவதும் விளம்பரமாக கொடுத்தது, இதுப்பற்றி அவரிடம் கேட்கையில் ‘என் வசனம் இப்படி நியாத்தின் குரலாக இருப்பதில் சந்தோஷம் தான், அதே நேரத்தில் நான் அந்த கட்சிக்கு ஆதரவு என்று நினைத்துவிடவேண்டாம்’ என கூறி பின் வாங்கிவிட்டார்.
இதன் மூலம், ரசிகர்கள் கோபம் எல்லாம் சிவகார்த்திகேயன் மீது மட்டும் தான் காட்டுவீர்களா? என தங்கள் கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.
Tags:
Cinema
,
சிவகார்த்திகேயன்
,
சினிமா
,
சென்னையில் ஒரு நாள்
,
லட்சுமி ராமகிருஷ்ணன்