அட்லி இயக்கத்தில் விஜய், எமிஜாக்சன் உட்பட பலர் நடிக்கும் தெறி படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு அண்மையில் தொடங்குவதாக இருந்ததாம். இதில் விஜய், எமிஜாக்சன் ஆகிய இருவரும் கலந்துகொள்ளும் பாடல் ஒன்று படமாக்கப்படவிருந்ததென்று சொல்லப்படுகிறது.
அதற்காக மிகப்பெரிய அளவில் அரங்கு அமைத்திருக்கிறார்கள்.படப்பிடிப்பு தொடங்க எல்லாம் தயார் நிலையில் இருந்திருக்கிறது. ஆனால் திட்டமிட்டபடி படப்பிடிப்பு தொடங்கவில்லையாம்.
அதற்குக் காரணம், படப்பிடிப்புக்கு நாயகி எமிஜாக்சள் வரவில்லை. என்னவென்று பார்த்தால், அவர் வெளிநாட்டிலிருந்து இந்தப்படப்பிடிப்பில் கலந்துகொள்வதற்காக சென்னை விமானநிலையம் வந்துவிட்டாராம்.
அவருடைய விசா காலம் முடிந்துவிட்டதாகச் சொல்லப்படுகிறது. அதைமுறையாக நீட்டிக்காமல் விட்டிருக்கின்றனர்.அதனால் அவர் சென்னைக்குள் வரமுடியவில்லையாம்.
எனவே அங்கிருந்தே அடுத்த விமானத்தில் அவர் கிளம்பிப்போய்விட்டதாகவும் சொல்கிறார்கள். விசா எடுத்துக்கொண்டு அவர் வந்தபின்புதான் படப்பிடிப்பு என்கிறார்கள். அதற்குச் சிலநாட்கள் பிடிக்கும் என்று சொல்கிறார்கள்.
எதிர்பாராமல் படப்பிடிப்பு தள்ளிப்போனதால் சம்பந்தப்பட்ட எல்லோரும் பதட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Tags:
Cinema
,
Theri Official Trailer
,
Vijay
,
சினிமா
,
விஜய்யின் தெறி