இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் தெறி படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. ஆரம்பத்தில் தெறி படத்தில் விஜய்யுடன் இணைந்து வடிவேலுதான் நடிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென அந்த இடத்துக்கு நான்கடவுள் ராஜேந்திரனை கொண்டு வந்துவிட்டார் இயக்குநர் அட்லீ.
தற்போது வடிவேலு விலகியதன் காரணம் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் தெறி படத்தில் நடிப்பதற்கு வடிவேலுவை அனுகிய அட்லீக்கு பெரிய ஷாக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பியிருக்கிறார் வைகைப்புயல். தெறி படத்தில் நடிக்க 4 கோடி சம்பளம் கேட்டாராம் வடிவேலு, இதனை கேட்டதும் பதில் எதுவும் சொல்லாமல் போயிட்டு லெட்டர் போட்றேன்னு ஸ்பாட்டை காலி செய்து நேராக நான் கடவுள் ராஜேந்திரனை புக் செய்துவிட்டாராம் அட்லீ. தெறி படத்தில் விஜய்யின் கார் டிரைவராக நடிக்கிறார் ராஜேந்திரன்
இதுவரை வடிவேலு வைத்து பொங்கினது போதும் என அனைத்து இயக்குநர்களும் இவரை ஒதுக்குவதற்குள் அடுத்த இன்னிங்ஸ் ஆரம்பிப்பாரா புயல்...
Tags:
Atlee
,
Cinema
,
Theri
,
சினிமா
,
வடிவேலு
,
விஜய்