சென்சார் போர்டின் ரிவைசிங் கமிட்டியில் உறுப்பினராக உள்ள பிரபல இசையமைப்பாளர் கங்கை அமரன் மற்றும் சென்சார் அதிகாரி மதியழகன் ஆகியோர் மீது பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான ஜிஆர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை பதிவு செய்துள்ளார்.
தயாரிப்பாளர் ஜிஆர் தமிழ், கன்னடம் ஆகிய இருமொழிகளில் ஒரு படத்தை தயாரித்துள்ளதாகவும், இந்த படத்திற்கு தமிழில் 'காதலி காணவில்லை' என்ற த்லைப்பிலும், கன்னடத்தில் 'பீஷ்மா' என்ற தலைப்பில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த படம் ஏற்கனவே கன்னடத்தில் சென்சார் ஆகிவிட்ட நிலையில் தமிழில் சென்சார் செய்ய சென்சார் அதிகாரிகள் மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
'காதலி காணவில்லை' என்ற திரைப்படம் நேரடி தமிழ்ப்படம் இல்லை என்றும், இது கன்னட படத்தின் தமிழ் டப்பிங் என்றும் கூறி சென்சார் அதிகாரிகள் மறுத்துவிட்டதாகவும், இதையடுத்து ஜி.ஆர் ரிவைசிங் கமிட்டிக்கு சென்றதாகவும் அங்கு உறுப்பினராக இருக்கும் கங்கை அமரன் உள்பட சென்சார் அதிகாரிகள் இதே காரணத்தை கூறி சென்சார் செய்ய மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. எனவே இதுகுறித்து ஜிஆர் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Tags:
Cinema
,
Gangai Amaran
,
கங்கை அமரன்
,
சினிமா