ஹன்சிகா தமிழ், தெலுங்கு படங்களில் முன்னணி கதாநாயகியாக வலம்வருகின்றார். சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகிறார். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் அனாதை குழந்தைகளை தத்தெடுப்பதையும் வழக்கமாக கொண்டிருக்கிறார்.
அவர் இது வரை 20 குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். அவர்களுக்கு உணவு, ஆடைகள் தங்குவதற்கான இடம், கல்வி உதவி போன்றவற்றையும் அவரே கவனித்துக் கொள்கிறார்.
தான் சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அவர்களுக்காகவே ஒதுக்குகிறார். ஹன்சிகாவுக்கு ஓவியம் வரைவதில் அதிக ஆர்வம் உண்டு. நிறைய ஓவியங்களை அவர் வரைந்துள்ளார். படப்பிடிப்பு ஓய்வின் போது அவர் நிறைய ஓவியங்களை வரைந்து தனது வீட்டில் வைத்துள்ளார்.
அந்த ஓவியங்களை ஏலம் விட ஹன்சிகா முடிவு செய்துள்ளார். அதில் கிடைக்கும் நிதியை அவர் ஆதரவற்றோர் இல்லங்களுக்கு வழங்க முன் வந்துள்ளார். சமீபத்தில் சென்னையில் மழைவெள்ளம் பாதித்த போது ஹன்சிகா அதிக அளவில் நிவாரண உதவிகளை வழங்கியது குறிப்பிடத்தக்கது.
Tags:
Cinema
,
Hansika Motwani
,
சினிமா
,
ஹன்சிகா