வேதாளம் படத்தில் மிரட்டல் இசையை கொடுத்து ரசிகர்களை கவர்ந்து விட்டார் அனிருத். அஜித் ரசிகர்கள் பலரும் அடுத்த படத்திற்கும் அனிருத்தையே கமிட் செய்யுங்கள் என சமூக வலைத்தளத்தில் கூறி வருகின்றனர்.
ஆனால், அனிருத் சில நாட்களாகவே இங்கு இல்லை, அவரை சுற்றி பல சர்ச்சைகள் சூழ்ந்து கொண்டே இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் அனிருத் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு ஸ்டேட்டஸ் ஒன்றை அப்டேட் செய்தார்.
இதில் ‘கெத்த விடாத பங்கு கெத்த விடாத’ என்று குறிப்பிட்டுயிருந்தார், ஒருவேளை அஜித்தின் அடுத்த படத்தின் இசை நான் தான் என்று சொல்லாமல் சொல்கிறாரா? அல்லது தொடர்ந்து பல படங்களில் அனிருத்தை கழட்டிவிட்டுள்ளனர்.
இதனால், இந்த வாக்கியத்தை குறிப்பிட்டாரா என்று தெரியவில்லை.
Tags:
Ajith
,
Cinema
,
அனிருத்
,
அஜித்
,
சினிமா
,
வேதாளம்