அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'தெறி' படத்தின் வசனக்காட்சிகளின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடியுந்தருவாயில் உள்ளது. சென்னை, கோவா படப்பிடிப்புகள் திருப்திகரமாக முடிந்திருப்பதாகவும், காட்சிகள் அனைத்தும் சிறப்பாக அமைந்துள்ளதாகவும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வரும் ஜனவரி மாதம் விஜய்யுடன் எமிஜாக்சன் ஆடிப்பாடும் சூப்பர் பாடல் ஒன்றின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. விஜய், எமிஜாக்சன் ஆகிய இருவருமே சிறந்த டான்சர்கள் என்பதால் இந்த பாடல் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் விஜய்க்கு சரிக்கு சமமாக எமிஜாக்சன் டான்ஸில் ஈடுகொடுப்பார் என்றும் கூறப்படுகிறது.
விஜய், சமந்தா, எமிஜாக்சன், பிரபு, ராதிகா சரத்குமார்,இயக்குனர் மகேந்திரன், சத்யராஜ், மொட்டை ராஜேந்திரன், அழகம் பெருமாள், காளி வெங்கட், உள்பட பலர் நடிக்கும் இந்த படத்தில் நடிகை சுனைனா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்து வரும் இந்த படம் இவருக்கு 50வது படம் என்பது குறிப்பிடத்தக்கது. கலைப்புலி எஸ்.தாணு இந்த படத்தை பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி படத்தில் விஜய்க்கு சரிக்கு சமமாக டான்ஸ் ஆடும் எமிஜாக்சன்