அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துக் கொண்டிருக்கும் படம் தெறி. சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர்கள் வெளியாகி அனைவரையும் மிகவும் கவர்ந்துவிட்டது. சமந்தா, எமிஜாக்சன் என இரண்டு அழகிய நாயகிகள் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருக்கும் இப்படத்தினை எப்போது ரிலீஸ் செய்வார்கள் என அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்க விஜய் ரசிகர்களுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் விதமாக தெறி படத்தை பொங்கலுக்கு களமிறக்க திட்டமிட்டிருக்கிறார்களாம். திலீப் சுப்பராயன் ஆக்ஷனில் பொறி பறக்க தயாராகிவிட்டது தெறி.
Tags:
Cinema
,
சினிமா
,
தெறி
,
பொறி பறக்க தயாராகிவிட்டது விஜய்யின் தெறி
,
விஜய்