தனது கன்றுக்குட்டியை கொன்ற பஸ்சை துரத்தி வழிமறிக்கும் பசு மாட்டின் பாசம்..!!
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் தனது கன்றுக்குட்டியை கொன்ற பஸ்சை சரியாக இனம் கண்டு, அந்த பஸ்சை துரத்தி, வழிமறிக்கிறது இந்த பசுமாடு. வேறு எந்த வாகனத்தையும் அந்த பசுமாடு தொந்தரவு செய்வதில்லை. கர்நாடக மாநிலம், உத்தர கன்னடாவில் உள்ள சிர்சியில்தான் இந்த சம்பவம் தினசரி அரங்கேறுகிறது.
பசு மாடு சரியாக பஸ்சை இனம் கண்டு வழிமறிப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக, அந்த பஸ்சை சில நாட்கள் இயக்காமல், பஸ்சின் வண்ணத்தையே மாற்றியுள்ளனர். ஆனாலும், அந்த பஸ்சை துல்லியமாக அடையாளம் கண்டு மறிக்கிறதாம் இந்த பசுமாடு.