சீனுராமசாமி இயக்கத்தில் விஜயசேதுபதி நடிக்கும் தர்மதுரை படத்தின் படப்பிடிப்பு தேனியில் நடந்துகொண்டிருக்கிறது.
இந்தப்படத்தில் விஜய்சேதுபதி ஜோடியாக முதன்முறையாக தமன்னா நடிக்கவிருக்கிறார். அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுவிட்டாலும் இன்னும் படப்பிடிப்புக்கு வரவில்லை. ஜனவரி முதல்வாரம் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்தப்படத்தில் நடிக்கக்கேட்டு அவரை அணுகியபோது அவர் கேட்ட சம்பளத்தைக் கேட்டு மிரண்டுவிட்டார்களாம்.
பாகுபலிக்குப் பிறகு அவருடைய சந்தைமதிப்பு உயர்ந்திருப்பதால் இந்தப்படத்தில் நடிக்கவேண்டுமானால் ஒன்றரைகோடி சம்பளம் வேண்டும் என்று கேட்டதாகச் சொல்கிறார்கள்.
அவர் கேட்கும் சம்பளத்தைத் தரவியலாது என்று சொல்லியதோடு படத்தின் கதை மற்றும் அவருடைய வேடம் ஆகியனவற்றைப் பற்றி விளக்கிச் சொல்லி சம்பளத்தைக் குறைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். அவர் கேட்ட சம்பளத்தில் பாதியை மட்டும் வாங்கிக்கொண்டு நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Tags:
Cinema
,
சினிமா
,
தமன்னா
,
தமன்னா கேட்ட சம்பளம் அதிர்ந்த படக்குழு