பீப் பாட்டுக்கும் எனக்கும் சம்மந்தமில்லை என்று அனிருத் விட்ட அறிக்கைக்கு சமூக வலைத்தளங்களில் மக்கள் கொந்தளித்து எழுதியுள்ளவற்றில் ஓரளவு வெளியில் சொல்லுமளவுக்கு 'நாகரீகமான' கமெண்ட் இதுதான்.பெண்களை மட்டுமல்ல,
ஆண் வர்க்கத்தையே அசிங்கப்படுத்தும் வகையில் கேவலமாக ஒரு பாடலை உருவாக்கி வெளியிட்டுள்ளனர் சிம்புவும் அனிருத்தும். இதற்காக ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமே இருவரையும் கடுமையாக கண்டித்து வருகிறது.திரையுலகினரோ என்ன விளக்கம் சொல்லலாம் என திகைத்து நிற்கின்றனர்.
அனிருத் விளக்கம்
எதிர்ப்பின் வீர்யத்தைக் கண்டதும், இப்போது தாம் வெளிநாட்டில் சென்னை வெள்ள நிவாரணத்துக்கு நிதி திரட்ட கச்சேரி செய்யும் வேலையில் இருப்பதாகவும், இந்த 'பு...' பாட்டுக்கும் தனக்கும் சம்மந்தமே இல்லை என்றும் அனிருத் விளக்கம் அளித்துள்ளார்.
வரிக்கு வரி பொய்
ஆனால் இது வரிக்கு வரி பொய்யான விளக்கம் என்பதையும், அனிருத் - தான் இந்தப் பாட்டை உருவாக்கிய இசையமைப்பாளர் என்பதையும் சிம்புவும் அவர் தந்தை ராஜேந்தரும் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டார்கள்.
சிம்பு
சிம்பு நேற்று அளித்த விளக்கத்தில், "இந்த பீப் பாடல் மட்டுமல்ல, இதுபோல இன்னும் 150 பாடல்களை நானும் அனிருத்தும் உருவாக்கி வைத்திருக்கிறோம் என்று வாக்குமூலம் கொடுத்திருந்தார்.
ராஜேந்தரின் உல்டா அறிக்கை
சிம்புவின் அப்பாவோ ஒரு படி மேலே போய், இந்தப் பாட்டுக்கு அனிருத்தான் இசையமைத்தார். என் மகன் பாடியிருந்தார். ஆனால் அதை பயன்படுத்தாமல் பத்திரமாக வைத்திருந்தார்கள். அதை முறைப்படி பயன்படுத்தும் முன் யாரோ களவாடி ரிலீஸ் பண்ணிவிட்டார்கள், அவர்கள் மீது நடவடிக்கை எடுங்கள், என்று ஸ்டேட்மென்ட் விடுத்துள்ளார்.
மக்கள் சீறல்
'ஒரு மகா கேவலமான காரியத்தை தெரிந்தே செய்துவிட்டு, இப்படி அண்டப் புளுகு புளுகுகிறானே இந்தப் பையன்' என்று சீற ஆரம்பித்துள்ளனர் மக்கள்.
Tags:
Cinema
,
சினிமா
,
டேய் அனிருத்... இந்த உடம்பை வச்சிகிட்டு இவ்வளவு பொய் ஆகாதுடா