சர்ச்சைக்குரிய பீப் பாடல் தொடர்பாக சிம்பு, அனிருத் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நடிகர் சிம்பு தலைமறைவாக இருப்பதாக தமிழக சைபர் கிரைம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், அவர்கள் இருவரிடமும் விசாரணை நடத்துவதற்கு சைபர் குற்றப்பிரிவு காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மற்ற மாநிலங்களிலும் சிம்புவை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.
சிம்பு தற்போது எங்கு இருக்கிறார் என்பது குறித்தும், இந்தப் பாடல் மீதான புகாருக்கு அவரின் விளக்கத்தை கேட்டறியவும் காவல்துறை அதிகாரிகள் முயற்சித்து வருகின்றனர். இந்நிலையில் சிம்பு வெளிநாடுகளுக்கு செல்வதை தடுக்கும் வகையில் அவரது பாஸ்போர்ட் முடக்கப்படக்கூடும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
Tags:
Cinema
,
சிம்பு தலைமறைவு தனிப்படை அமைத்து தேடுகிறது
,
சினிமா