சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இசைஞானி இளையராஜாவிடம் செய்தியாளர் ஒருவர் சிம்பு பாடிய பீப் பாடல் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது கோபமடைந்த இளையராஜா, அவரை திட்டி, வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இளையராஜாவின் இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனும் தனது டுவிட்டர் பக்கத்தில் இளையராஜாவின் செயலுக்கு கடும் ஆட்சேபம் செய்தார். அப்போது ஜேம்ஸ் வசந்தனுக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பினர்.
இந்நிலையில், ஜேம்ஸ் வசந்தன், இளையராஜா பற்றி தான் கூறிய கருத்து காயமேற்பட்டிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சமீபத்தில் நான் ராஜா சார் பற்றி கூறிய கருத்துகள் மிகவும் பூதாகரமாக வெடித்து உள்ளது.
இந்த சர்ச்சையை இத்துடன் முடித்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும், ராஜா சாருடைய ரசிகர்கள் பலர் என்னுடைய இந்த கருத்தால் காயமுற்றதால் தான் இந்த மன்னிப்பு அறிக்கை.
இதே நேரத்தில் சில விஷமிகள் என்னுடைய பெயரையும், படத்தையும் வைத்துக் கொண்டு அவதூறான கருத்துகளையும், பரப்புரையும் செய்து வருகிறார்கள். அதனால் தான் நேற்றே என்னுடை ட்விட்டர் தொடர்பையும் விட்டு விட்டேன்.
இந்த அறிக்கை மூலம் நான் என்னுடைய நிலையை தெளிவு செய்துக் கொள்ள விரும்புகிறேன். நான் என்னுடைய மனதில் உள்ளதை பேசுபவன், யார் மனதை புண்படுத்தவோ குறிப்பாக தமிழ் சமுதாயத்தை சேர்ந்தவர்களை புண்படுத்தவோ நினைக்ககூட செய்யாதவன். நடந்த சம்பவங்களை மறந்து முன்னேறுவோம் என்று கூறியுள்ளார்
Tags:
Cinema
,
இளையராஜா ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய ஜேம்ஸ் வசந்தன்
,
சினிமா