பீப் சாங், இளையராஜா அறிவிருக்கா, ஜேம்ஸ் வசந்தன் கமெண்ட் என கொஞ்சம் சீரியசான செய்திகளையே நமது தமிழ் சினிமா ரசிகர்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களைக் கொஞ்சம் குஷிப்படுத்தவோ என்னவோ ஸ்ரேயா படு கிளாமரான செல்ஃபி புகைப்படங்களை அவருடைய டிவிட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
தமிழில் எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் 2003ம் ஆண்டு நாயகியாக அறிமுகமான ஷ்ரேயா அப்படத்திற்கு பின் ரஜினிகாந்த், விஜய், விக்ரம், விஷால், ஜெயம் ரவி, ஜீவா என பல நடிகர்களுடன் ஜோடி போட்டவர்.
கடந்த 12 ஆண்டுகளாக இன்னமும் அதே இளமைத் தோற்றத்தில் அசத்தலான உடலமைப்புடன் இருக்கிறார். காரணம் தினமும் உடற்பயிற்சி செய்வதை ஷ்ரேயா விடுவதேயில்லையாம்.
அதுதான் தன் உடலமைப்பின் ரகசியம் என்கிறார். இந்நிலயில் நேற்று உடற்பயிற்சி செய்யும் போது அவரின் சில அசத்தலான கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு சற்றே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார்.
Tags:
Cinema
,
இளையராஜா வரிசையில் ஷ்ரேயா
,
சிம்பு
,
சினிமா
,
ஷ்ரேயா